ஓபிஎஸ் - ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை ஒதுக்கப்பட்டதற்கு மத்திய அரசின் தலையீடுதான் காரணம்: ஜெ.தீபா குற்றச்சாட்டு

மத்திய அரசின் முழு ஒத்துழைப்போடு ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்துள் ளார்.

இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி சசிகலா மற்றும்ஓ.பன்னீர்செல்வம் அணிகள் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தன. அதைத்தொடர்ந்து, தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்துக்கொள்ளக் கோரி ஜெயலலிதாவின் அண் ணன் மகள் ஜெ.தீபா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் அனைத்தையும் விசாரித்த தேர்தல் ஆணையம் நேற்றுமுன்தினம் தீர்ப்பளித்தது.

அந்த தீர்ப்பில், ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா ஜெயக்குமார் கடந்த ஜூன் 15-ம் தேதி தன்னையும் இந்த வழக்கில் இணைத்துக் கொள்ளக் கோரி மனு தாக்கல் செய்தார். அவர் தனக்கு ஆதரவாக 20,000 அதிமுக உறுப்பினர்களின் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ததோடு, தங்கள் தரப்பையும் தனி அணியாக கருதுமாறு தெரிவித்திருந்தார். ஆனால், தீபா அதிமுகவின் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லை. இவ்வாறு தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பினருக்கு தேர்தல் ஆணையம் வழங்கிய அடுத்த 24 மணி நேரத்துக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதை வைத்துப் பார்க்கும்போது திட்டமிட்டே இத்தனை நாள் இழுத்தடித்துள்ளனர் என்பது தெளிவாகிறது. சின்னம் தொடர் பான விசாரணையை கண்துடைப்புக்காகத்தான் தேர்தல் ஆணையம் நடத்தியுள்ளது. இந்த வழக்கில் முழுக்க முழுக்க மத்திய அரசு தலையீடு இருந்துள்ளது.

சின்னத்தை அவர்களுக்கு வழங்கியதால் அது எங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூற முடியாது. தேர்தல் ஆணையம் எனது மனுவை ஏற்றுக்கொண்டது. எனது மனுவை நிராகரிக்க, ‘நான் அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இல்லை’ என்பதை மட்டும்தான் தேர்தல் ஆணையம் காரணமாகத் தெரிவித்துள்ளது. ஆனால், அவ்வாறு அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டியது கட்டாயமில்லை என அதிமுகவின் பல தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாமா என்பது குறித்து பேரவை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Ninaivil

திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017
திரு அருணாசலம் வேல்முருகு
திரு அருணாசலம் வேல்முருகு
அனுராதபுரம்
யாழ். உரும்பிராய் கோப்பாய், கனடா
8 டிசெம்பர் 2017
Pub.Date: December 8, 2017