மருது கணேஷ் ஜெயிக்கப் போறார்; ஸ்டாலினை சந்தித்து வெற்றி வாழ்த்து கூறிய காதர் மொகிதீன்!

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, இந்திய முஸ்லீம் லீக்கின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் வெற்றி வாழ்த்து தெரிவித்தார்.

திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலினை, அவரது இல்லத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் நேரில் சந்தித்தார்.

ஆர்.கே. நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தும், வெற்றிபெறவும் வாழ்த்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மருதுகணேஷ் வெற்றிபெற்று எம்.எல்.ஏ. விருது பெறும் கணேசாக மாறுவார்.

2001 முதல் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றி பெற்று வந்தது. இப்போது இந்த நிலை மாறி எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார் என்ற வரலாறு உருவாகும்.பா.ஜ.க.வின். கொள்கைகள், ஆட்சிமுறைகள் மக்களால் வெறுப்பு கொண்டுள்ளது. அந்த கட்சியை சேர்ந்த தலைவர்களே இதை வெளிப்படுத்தி வருகிறார்கள். நண்பர் தொல் திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி முழு ஆதரவை கொடுக்கும் என்று அறிவித்திருக்கிறார்.

அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இடதுசாரி தோழர்களும் மற்றும் பிற கட்சியினரும் ஆதரித்து திமுக வேட்பாளரை வெற்றிபெற செய்ய வேண்டும்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத மாற்றம் இந்த தேர்தல் மூலம் வரும். வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைய சத்தியம் கூறும் வகையில் இந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அமையும் என்று கூறினார்.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018