ஆர்.கே.நகர் வேட்பாளர் யார்? அ.தி.மு.க., நாளை முடிவு

ஆர்.கே.நகர் வேட்பாளரை முடிவு செய்வதற்காக, அ.தி.மு.க., தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலர்கள் கூட்டம், நாளை நடைபெற உள்ளது.

அ.தி.மு.க.,வில், வேட்பாளர் தேர்வை, ஆட்சி மன்ற குழு தான் முடிவு செய்யும். ஜெ., இருந்த போது, ஆட்சி மன்ற குழுவில், ஜெயலலிதா, விசாலாட்சி நெடுஞ்செழியன், மதுசூதனன், பன்னீர்செல்வம், ஜஸ்டின் செல்வராஜ், வேணுகோபால், தமிழ்மகன் உசேன் ஆகியோர் இருந்தனர்.

அவர்களில், ஜெ.,யும், விசாலாட்சியும் தற்போது இல்லை. அவருக்கு பதிலாக, புதிய நபர்களை தேர்வு செய்ய வேண்டும். இதற்காக, அ.தி.மு.க., தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலர்கள் கூட்டம், நாளை காலை, 11:30 மணிக்கு, சென்னையில், கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

இக்கூட்டத்தில், உட்கட்சி பிரச்னைகள் ஆலோசிக்கப்பட உள்ளன. மேலும், ஜெ., முதலாம் ஆண்டு நினைவு தினம், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு நிறைவு விழா, ஆட்சி மன்ற குழு மாற்றம், ஆர்.கே.நகர் வேட்பாளர் தேர்வு ஆகியவை குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது. 

அ.தி.மு.க.,விலிருந்து ஒதுக்கப்பட்ட தினகரன், தற்போது, எந்த கட்சியும் இல்லாமல் உள்ளார். அவர், மீண்டும் போட்டியிட விரும்புகிறார்.

சென்னையில், நேற்று தன் ஆதரவாளர்களுடன், அவர் ஆலோசனை நடத்தினார். பின், 'மீண்டும், 29ம் தேதிகூடி, வேட்பாளர் பெயரை அறிவிப்போம்' என, தினகரன் ஆதரவாளர், தங்கதமிழ்செல்வன் தெரிவித்தார்.

Ninaivil

திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
யாழ்ப்பாணம்
கனடா
7 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 9, 2018