திமுக வெற்றி ஆட்சி மாற்றத்திற்கு முன்னோட்டமாக அமையும்

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் நிச்சயம் திமுக வெற்றி பெறும். இந்த வெற்றி தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு முன்னோட்டமாக அமையும் என்று திமுக வேட்பாளர் மருது கணேஷ் கூறினார். ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இது பற்றி திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு வருமாறு: வருகிற 21-12-2017ல் நடைபெற இருக்கும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தோழமைக் கட்சிகளின் ஆதரவு பெற்ற திமுக வேட்பாளராக என்.மருதுகணேஷ் போட்டியிடுவார் என்று தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்படு கிறது. இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் மருதுகணேஷ் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார். அவருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் மருது கணேஷ் கூறியது: ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் திமுக தொண்டனாகிய என்னை வேட்பாளராக அறிவித்த தற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கனவே தேர்தல் அறிவிக்கப்பட்ட போது திமுக வெற்றி பெறுவதாக இருந்தது. திமுகவுக்கு ஆதரவு பெருகிய நிலையில் தேர்தல் நிறுத்தப்பட்டது.

முன்பை விட இப்போது திமுகவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. அதிமுக மீது மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள். அந்த கோபம் திமுகவுக்கு ஆதரவு அளிக்கும் வாக்குகளாக மாறும். இது தவிர மு.க.ஸ்டாலின் மீதான மக்கள் நம்பிக்கையும் திமுகவுக்கு ஆதரவான வாக்குகளை அதிகரிக்கும். எனவே திமுக நிச்சயம் பெற்றி பெறும். இந்த வெற்றி தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான முன்னோட்டமாக அமையும். எங்கள் இலக்கு வெற்றி மட்டும் தான். மக்கள் பிரச்னைகளை முன்வைத்து பிரசாரம் செய் வோம். இந்த ஆட்சியில் மக்கள் பிரச்னைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை.

வாக்காளர்களுக்கு பணம் தர அதிமுக முயன்றால் அதை திமுக தடுத்து நிறுத்தும். இவ்வாறு மருது கணேஷ் கூறினார். 

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018