சசிகலாவிடம் விசாரணை நடத்த நீதிமன்ற உத்தரவு தேவை : வருமான வரி அதிகாரிகளுக்கு பெங்களூரு சிறைத்துறை கடிதம்

தண்டனை கைதி சசிகலாவிடம் விசாரணை நடத்த நீதிமன்ற உத்தரவுடன் தேவை என்று சென்னை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு, பெங்களூரு சிறைத்துறை  அதிகாரி கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது. சொத்து குவிப்பு  வழக்கில் தண்டனை பெற்ற, சசிகலா  மற்றும் இளவரசி ஆகியோர் கடந்த பிப்.16ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா  சிறையில் அடைக்கப்பட்டனர். அன்று முதல் பல்வேறு நெருக்கடிகளை சசிகலா  சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு  சகிலாவின் உறவினர்களுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான  வரித்துறை அதிகாரிகள் அதிரடி  சோதனை நடத்தினர். அதில் பல்வேறு ஆவணங்கள்  வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கிடைத்தது. அந்த ஆவணங்கள் தொடர்பாக  பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா மற்றும் இளவரசியிடம் விசாரணை நடத்த சென்னை  வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். 

இதற்காக கடந்த வாரம் வருமான  வரித்துறை அதிகாரிகள் சார்பில், சசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி,  சிறைத்துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதை பெற்றுக் கொண்ட  சிறைத்துறை அதிகாரிகள் தீவிர பரிசீலனை செய்தனர். சசிகலா தண்டனை  கைதி என்பதால் அவரிடம் விசாரணை நடத்த சட்டப்படி நீதிமன்றத்தின் அனுமதியை  பெற வேண்டுமென்று கூறப்படுகிறது. கர்நாடக சிறைத்துறை விதிமுறையிலும் அந்த  கட்டுப்பாடுகள் உள்ளது.

இதனால் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகள்,  சென்னை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு பதில் கடிதம் அனுப்பியதாக  கூறப்படுகிறது. அதில், தண்டனை கைதிகளான  சசிகலா, இளவரசியிடம் விசாரணை நடத்த,  கர்நாடக சிறை விதிமுறைப்படி நீதிமன்ற அனுமதி பெற்றிருக்கவேண்டும்.  நீதிமன்ற அனுமதி கடிதம் கிடைத்த மறுநிமிடமே இருவரிடமும் விசாரணை  நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று கூறப்பட்டிருப்பதாக  தெரிகிறது.

அதை ஏற்ற சென்னை வருமான வரித்துறை அதிகாரிகள்,  நீதிமன்றத்தில் அனுமதி பெற தேவையான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.  ஆனால், இதுகுறித்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை  கண்காணிப்பாளர் சோமசேகரிடம் கேட்டபோது, அவர், வருமான வரித்துறைக்கு  எந்த கடிதமும் அனுப்பவில்லை என்று மறுத்துள்ளார்.

Ninaivil

திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018