மாவீரர் வெற்றிக் கிண்ண துடுப்பாட்டப் போட்டியில் நண்பர்கள் அணி வாகை!

மாற்றத்திற்கான இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் வெற்றிக் கிண்ண துடுப்பாட்டப் போட்டியில் உடையார்கட்டு "நண்பர்கள்" அணி மகுடம் சூடியது.

மாற்றத்திற்கான இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டாளர்களான யோ.சுதர்சன், ஆ.ஜோன்சன், சி.பிரதீபன் ஆகியோரின் தலைமையில் நேற்று சனி தொடக்கம் ஞாயிறு இன்று வரை நண்பர்கள் விளையாட்டு கழகத்தில்  நடைபெற்ற துடுப்பாட்டத் தொடரில் 14 அணிகள் கலந்துகொண்டன.

இறுதி ஆட்டம் இன்று காலை 9:30 மணியளவில் நடைபெற்றது. இதில்  நண்பர்கள் அணியும் சுதந்திரபுரம் மத்திய அணியும் மோதிக்கொண்டன. இதில்  நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நண்பர்கள் அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடி 4 இலக்குகளை இழந்து 68 ஓட்டங்களைப் பெற்றனர்.

அணி சார்பில் காந்தன் 50 ஓட்டங்களையும் கயன் 7 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர். பந்துவீச்சில் சுதன் ஜின்னா டில்றுக்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு இலக்குகளை கைப்பற்றியதுடன் தொடர்ந்து ஆடிய சுதந்திரபுரம் மத்திய அணியினர் ஆறு இலக்குகளை இழந்து 59 ஓட்டங்களைப் பெற்று 9 ஓட்டங்களால் தோல்வியடைந்தனர்.

வெற்றிபெற்ற அணியிற்கான மாவீரர் கிண்ணத்தை வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் வழங்கி வைத்ததுடன் இரண்டாம் இடம் பெற்ற ஆணியிற்கான கிண்ணத்தை மாற்றத்திற்கான இளைஞர் அமைப்பின் ஆலோசகர் என்.விஷ்னுகாந்தன் வழங்கிவைத்தார்.

மேலும், தொடர் ஆட்டநாயகனிற்கான கிண்ணத்தை மாற்றத்திற்கான இளைஞர் அமைப்பின் செயலாளர் ஆ.ஜோன்சன் வழங்கி வைத்தார்.

ஆட்டநாயகனிற்கான கிண்ணத்தை புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தக சங்கத் தலைவர் சந்திரன் வழங்கி வைத்ததுடன் 2017 மாவீரர் வெற்றிக் கிண்ண நிகழ்வுகள் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்
கனடா
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
யாழ். புங்குடுதீவு குறிகட்டுவானை
பிரான்ஸ்
இறப்பு : 13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
யாழ். மிருசுவில் வடக்கை
யாழ். மிருசுவில் வடக்கை
12 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
யாழ். சாவகச்சேரி
கனடா
10 யூலை 2018
Pub.Date: July 13, 2018