ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட்; 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி!

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டில், ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி, கடந்த 23ஆம் தேதி பிரிஸ்பேனில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 302 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக ஜேம்ஸ் வின்ஸ் 83 ரன்களும், டேவிட் மலன் 56 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்ச்செல், பேட் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். இதையடுத்து ஆடத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 328 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 141 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டூவர்ட் போர்டு 3 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சில், 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.அதிகபட்சமாக ஜோ ரூட் 51, ஜொன்னி 42 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்ச்செல், ஜோஸ், நாதன் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

இந்நிலையில் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் நிலைத்து நின்று ஆடினர்.

கேமரூன் 82, டேவிட் வார்னர் 87 ரன்கள் எடுத்து, இருவரும் ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இதன்மூலம் 10 விக்கெட் வித்தியாசத்தில், ஆஷஸ் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.இதனால் 1-0 என்ற புள்ளிகள் கணக்கில், தொடரில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது.

Ninaivil

திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
யாழ்ப்பாணம்.
லண்டன்
8 மார்ச் 2018
Pub.Date: March 13, 2018