இரட்டை இலை உதிரும்.. தமிழிசை ஜோசியம் - ஒருவேளை பலிச்சிருமோ?

அதிமுகவில் ஆளுக்கு ஆள் ஒரு பக்கம் பேசி வருவதால் மீண்டும் பிளவு ஏற்பட்டு இரட்டை இலையாக பிரிந்து விடுவார்கள் என்று தமிழிசை சொன்ன ஜோதிடம் பலித்து விடுமோ என்று தொண்டர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.

ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் அமாவாசையில் இணைந்தன அதிமுக அணிகள். அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்பது மைத்ரேயன் கருத்து.

முடக்கப்பட்டிருந்த இரட்டை இலையை மீட்டு விட்டனர். ஆனாலும் கொடியேற்ற விழாவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்கள் பங்கேற்கவில்லை.அதிமுக அணிகள் மீண்டும் பிளவு படும் என்று எதிர்கட்சியினரும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் கூறி வருகிறார். தற்போதுதான் ஒருங்கிணைந்த அணியினருக்கு இரட்டை இலை கிடைத்துள்ளது. ஆனால், அதற்குள் மீண்டும் பிரிந்துவிடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் வைத்துப்பார்த்தால் அவர்கள் இரட்டை இலையாக பிரிந்துவிடுவார்கள் என்பதையே யூகிக்க வைக்கிறது என்றார்.இரு அணிகளும் இணைந்து விட்டதாக கூறினாலும் தொண்டர்களுக்கு இடையே சலசலப்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது. திருப்பூரில் ஜெயலலிதா நினைவு நாள் அஞ்சலி கூட்டம் நடத்து தொடர்பான ஆலோசனைக்கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.எம்.எஸ்.எம். ஆனந்தனின் உதவியாளர் ஷாஜகான், தனது முகநூல் மற்றும் வாட்ஸ்-அப்பில் ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி, மாஃபா பாண்டியராஜன், மைத்ரேயன் ஆகியோரை விமர்சித்து தொடர்ந்து மீம்ஸ் போடுகிறார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. கட்சி நன்றாக இருக்க, அனைவரும் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என்று சமாதானப்படுத்தியுள்ளனர்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வது உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகளை விவாதிக்க அதிமுக உறுப்பினர்கள் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ் வந்த போது உற்சாக குரல் எழுப்பினர்.

அதே நேரத்தில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி வந்த போது தொண்டர்கள் அமைதியாகவே இருந்தனர். கூட்டத்தில் ஆட்சிமன்ற குழு நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டது. கார சார விவாதம் நடைபெற்றது. பிளவுபட்டிருந்த அணிகள் இணைந்து இருமாதங்களே நிறைவடைந்துள்ளன. அதற்குள்ளாக ஏற்பட்டுள்ள சலசலசப்பை வைத்து பார்த்தால் தமிழிசையின் ஆருடம் பலித்து விடுமோ என்று தொண்டர்கள் பேசிக்கொள்கின்றனர்.


  

Ninaivil

திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்
கனடா
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
யாழ். புங்குடுதீவு குறிகட்டுவானை
பிரான்ஸ்
இறப்பு : 13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
யாழ். மிருசுவில் வடக்கை
யாழ். மிருசுவில் வடக்கை
12 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
யாழ். சாவகச்சேரி
கனடா
10 யூலை 2018
Pub.Date: July 13, 2018