பணம் சம்பாதிப்பதை விட குழந்தைகளை வளர்ப்பது முக்கியம்: கார்த்தி

பணம் சம்பாதிக்கிறதைவிட குழந்தைகளை எப்படி வளர்க்கிறோம் என்பது தான் முக்கியம் என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரது நடிப்பில் கடந்த 16ம் தேதி வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், சென்னையில் இப்படத்தின் வெற்றி விழா நடந்தது. இதில், கார்த்தி, இசையமைப்பாளர் ஜிப்ரான், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய நடிகர் கார்த்தி கூறுகையில், படத்தை பார்த்துவிட்டு நன்றாக இருக்கு என்று சொன்னால் மட்டும் போதாது. அப்படத்தை கண்டிப்பாக திரையரங்கில் தான் பார்க்க வேண்டும். இயக்குனர் வினோத்தின் முதல் படம். வித்தியாசமான கதைகளை கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. போலீஸ் அதிகாரிகளும் தனக்கு போன் செய்து பாராட்டி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வித்தியாசமான கதைகளை உருவாக்கும் இயக்குனர்கள் இயக்கும் படங்களுக்கு வரவேற்பு கிடைத்தால் தான் அவர்களால் மேற்கொண்டு படங்களை இயக்க முடியும். தோல்விகளையும், அவமானங்களையும் தாண்டி வரும் போது தான் முழுமை அடைகிறோம். இதனை ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களது குழுந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். தோல்வி என்பது வாழ்வின் ஒரு முக்கியமான அங்கம் தான். அதனை நாம் சந்திக்கும் போது தான் அவர்கள் உறுதி பெறுகிறார்கள்.

வளர வேண்டும் என்றாலே குழந்தைகள் தோல்விகளை சந்தித்து தான் வரவேண்டும் என்று பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆனால், இதனை விட்டுவிட்டு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அடிக்கிறார்கள். பணம் சம்பாதிப்பதை விட ஒரு குழந்தையை வளர்ப்பது என்பது தான் மிகவும் முக்கியம் என்று கார்த்தி கூறியுள்ளார்.

Ninaivil

திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
யாழ்ப்பாணம்.
பிரான்ஸ்
16 டிசெம்பர் 2017
Pub.Date: December 17, 2017
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017