ராகுலுக்கு எதிராக தாக்கு நான் டீ விற்றவன்தான் நாட்டை விற்பவன் கிடையாது

‘குஜராத் தேர்தல், வளர்ச்சி மீதான நம்பிக்கை மற்றும் வாரிசு அரசியலுக்கு இடையிலான போட்டியாக உள்ளது’’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் வரும் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடைபெறுகிறது. இதன் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜ.வை வீழ்த்த காங்கிரஸ் வியூகம் வகுத்துள்ளது. கடந்த சில தினங்களாக குஜராத்தில் முகாமிட்டுள்ள அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை தாக்கி பல்வேறு விஷயங்களை முன்னிருத்தி பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கட்ச் மாவட்டத்தின் புஜ் பகுதியில் பாஜ சார்பில் நேற்று பிரசார பேரணி நடந்தது. 

இதில் பிரதமர் மோடி காங்கிரசின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் பேசியதாவது: இந்த குஜராத் மகனின் பொது வாழ்வில் எந்த கறையும் இல்லை. இந்த மண்ணின் மகன் மீது குற்றச்சாட்டுகளை முன்னிறுத்த நீங்கள் (காங்கிரசார்) மாநிலத்திற்கு வந்துள்ளீர்கள். இந்த மாநிலத்தின் மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள்.

குஜராத் தேர்தல் வளர்ச்சி மீதான நம்பிக்கை மற்றும் வாரிசு அரசியலுக்கு இடையிலான போட்டி. சீன எல்லையில் உள்ள நமது டோக்லாமில் 70 நாட்களாக நம் வீரர்கள் பனியில் அந்நாட்டு வீரர்களுடன் மல்லுக்கு நின்றுக் கொண்டிருந்தபோது, நீங்கள் (ராகுல்) ஏன் சீன தூதரை தழுவிக் கொண்டிருந்தீர்கள்?. நான் டீயை விற்றவன்தான். ஆனால், நாட்டை விற்பவன் அல்ல. அரசின் ்செயல்களுக்கு எதிராக பேச உங்களுக்கு  எந்த அருகதையும் கிடையாது. இவ்வாறு மோடி பேசினார்.

பிரதமர் மோடி பேச்சு அத்வானி ஒதுங்கினார்

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்கான நட்சத்திர தலைவர்களின் பட்டியலில் மோடி, அமித்ஷா உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அதில் கட்சியின் மூத்த தலைவராக அத்வானியின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அதிருப்தியில் இருக்கும் அவர், எந்த கூட்டத்திலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிவிட்டார். அத்வானியை ஒதுக்கிய விஷயம், பாஜ.வில் இருக்கும் பல தலைவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

மனுத்தாக்கல் முடியும் நாளில் பாஜ, காங். இறுதிப்பட்டியல்

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் 2ம் கட்டத்துக்கு நேற்றுடன் வேட்புமனுத்தாக்கல் முடிந்தது. இதனால் காங்கிரஸ், பாஜ கட்சிகள் நேற்று தங்கள் இறுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டன. காங்கிரஸ் தனது 3வது வேட்பாளர் பட்டியலை நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது.

இதில் 76 வேட்பாளர்களின் பெயர்கள் உள்ளன. பழங்குடியினருக்கு 11 இடங்களும், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 3 இடங்களும் இப்பட்டியலில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 14 பேர் அடங்கிய இறுதிப்பட்டியலை காங்கிரஸ் நேற்று வெளியிட்டது. பாஜ.வும் தனது கடைசி வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. 34 வேட்பாளர்களின் பெயர்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

தற்போது எம்எல்ஏவாக உள்ள 12 பேருக்கு பாஜ மீண்டும் வாய்ப்பளித்துள்ளது. அதே நேரத்தில் அமைச்சர் மற்றும் முன்னாள் முதல்வரான ஆனந்திபென் உள்ளிட்ட 5 பேருக்கு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. இப்பட்டியலில் காங்கிரசில் இருந்து பாஜ.வுக்கு தாவியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Ninaivil

திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
யாழ். காரைநகர்
சுண்டுக்குளி, கனடா
19 யூலை 2018
Pub.Date: July 21, 2018
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018