சசிகலா லஞ்சம் கொடுத்தது உண்மை மானநஷ்ட வழக்கை சந்திக்க தயார் : பெண் போலீஸ் அதிகாரி ரூபா சவால்

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் முறைகேடு நடந்துள்ளதாக  கூறிய குற்றச்சாட்டில் இப்போதும் தான் உறுதியாக உள்ளதாகவும், தனது அறிக்கையை  எதிர்த்து நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மானநஷ்ட வழக்கை சந்திக்க தயாராக  உள்ளதாகவும் பெண் போலீஸ் அதிகாரி ரூபா உறுதியாக தெரிவித்தார்.

கடந்த  ஜூலை 26ம் தேதி, கர்நாடக சிறைத்துறை  டிஐஜியாக இருந்த ரூபாவிற்கு அப்போது டிஜிபியாக இருந்த சத்யநாராயணராவ்  அனுப்பி–்ய வக்கீல் நோட்டீசில் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற   சசிகலாவிற்கு சிறைச்சாலையில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க ரூ.2  கோடி லஞ்சம் பெற்றதாக தாங்கள் பகிரங்க குற்றச்சாட்டு கூறியுள்ளீர்கள்.

இது  எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வண்ணம் உள்ளது.  என் மீது  கூறியுள்ள புகார் குறித்து, 3 நாட்களுக்குள் பகிரங்கமாக மன்னிப்பு  கேட்கவேண்டும்  என்று கூறியிருந்தார். சத்யநாராயணராவ் அனுப்பிய  நோட்டீசுக்கு போலீஸ் அதிகாரி ரூபா பதில் கொடுக்கவில்லை. 

அதைத் தொடர்ந்து ரூபாவிடம் ரூ.20 கோடி நஷ்டஈடு கேட்டு பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில்  ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி சத்யநாராயணராவ் வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவை  விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் நேற்று முன்தினம் ரூபாவுக்கு நோட்டீஸ்  அனுப்பியுள்ளது.

இது குறித்து ரூபா கூறியதாவது: ஒரு அரசாங்க அதி்காரியாக எனது கடமையை செய்துள்ளேன்.  சிறையில் நான் நேரில் சென்று ஆய்வு செய்தபோது என்னென்ன முறைகேடுகள் கண்ணில்  பட்டதோ அதை அறிக்கையாக கொடுத்தேன். 

இது  மற்றவர்கள் பார்வையில் குற்றமாக தெரிந்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்ற டிஜிபி சத்யநாராயணராவ்  சார்பில் எனக்கு நோட்டீஸ் அனுப்பிய வக்கீலே தனியார் செய்தி நிறுவனம்  ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் சிறையில் முறைகேடுகள் நடந்துள்ளதை  ஒப்புக்கொண்டுள்ளார். அதை தான் நான் அறிக்கையாக கொடுத்துள்ளேன். 

சிறையில்  நடந்துவரும் முறைகேடுகளை சரி செய்வதுடன் தவறு செய்துள்ள அதிகாரிகள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கொடுத்த அறிக்கையின் உண்மையை  புரிந்துகொண்டு அவர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.  எனது புகார்  தொடர்பான உண்மை நிலையை தெரிந்து கொள்ள மாநில அரசின் சார்பில் ஓய்வுபெற்ற  ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும் விசாரணை நடத்தி  அரசிடம் கொடுத்துள்ள அறிக்கையில் முறைகேடு நடந்துள்ளதை உறுதி செய்துள்ளது.

ஓய்வு பெற்ற டிஜிபி என்மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளதாகவும்,  பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம் விளக்கம் கேட்டு எனக்கு நோட்டீஸ்  அனுப்பியுள்ளதாகவும் மீடியாக்கள் மூலம் தெரிந்து கொண்டேன். நீதிமன்ற  நோட்டீஸ் இதுவரை அதிகாரபூர்வமாக எனக்கு கிடைக்கவில்லை.

நோட்டீஸ் வந்ததும்  உரிய பதில் கொடுப்பதுடன், வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்கவும் நான் தயாராக  உள்ளேன். அவரின் கு்ற்றச்சாட்டிற்கு நீதிமன்றத்தில் உரிய சாட்சி  ஆதாரங்களுடன் பதில் கொடுப்பேன். இவ்வழக்கில் நீதிமன்றத்தில் நானே ஆஜராகி  வாதம் செய்வேன். இந்த விஷயத்தில் எத்தனை இடையூறு வந்தாலும் பின் வாங்காமல்  உறுதியாக இருப்பேன் என்றார்.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018