தற்போதைய கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த ஸ்பின்னர் அஸ்வின் தான்.

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் புதிய சாதனை படைத்தார்.

அந்த போட்டியில் மொத்தமாக எட்டு விக்கெட் எடுத்ததன் மூலம் இவர் அதிவேகமாக 300 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். தனது 54வது டெஸ்டிலேயே 300 விக்கெட் என்ற சாதனை மைல் கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார்.ஆஸி. வேகம் டெனிஸ் லில்லீ 56 டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட் வீழ்த்தியதே முந்தைய சாதனையாக இருந்தது.

உலக அளவில் 300 விக்கெட் எடுத்த 8வது சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையும் அஷ்வினுக்கு கிடைத்துள்ளது. பந்துவீச வாய்ப்பு கிடைத்த இன்னிங்ஸ் மற்றும் பந்துகளின் எண்ணிக்கை அடிப்படையிலும், 300 விகெட்டை அதிவிரைவாக வீழ்த்திய பவுலர் அஷ்வின் தான். ஆஸ்திரேலிய சுழல் நட்சத்திரம் ஷேன் வார்ன் 116வது இன்னிங்சில் தான் (18501 பந்து) இந்த மைல் கல்லை எட்டியிருந்தார். அஷ்வின் 101வது இன்னிங்சிலேயே (15636 பந்து) அதை சாதித்துள்ளார்.

இலங்கையின் முத்தையா முரளிதரன் 91வது இன்னிங்சில் 300 விக்கெட் வீழ்த்தி இருந்தாலும், அதற்கு 18622 பந்து தேவைப்பட்டது.முக்கிய ஸ்பின் பவுலர்கள் கூட செய்ய முடியாத சாதனையை அஸ்வின் தற்போது செய்து முடித்துள்ளார். இந்நிலையில் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் அஸ்வினை புகழ்ந்து தள்ளியுள்ளார். அஸ்வின்தான் தற்போது உலகில் இருக்கும் ஸ்பின் பவுலர்களிலேயே மிகவும் திறமையானவர். அவர் தான் சிறந்தவர்.

54 போட்டிகளில் 300 விக்கெட் எடுப்பது எல்லாம் சாதாரண விஷயம் இல்லை என புகழாரம் சூட்டியுள்ளார். அஸ்வின் இன்னும் 5 வருடம் வரை விளையாட வாய்ப்பு உள்ளது. ஆகவே கண்டிப்பாக அவர் யாரும் செய்யாத பல சாதனைகளை செய்வார். வேகமாக 800 விக்கெட்டுகளை வீழ்த்தும் சாதனையை கூட அவர் செய்யும் வாய்ப்பு உள்ளதாக முரளிதரன் கூறியுள்ளார்.

Ninaivil

திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
யாழ்ப்பாணம்.
பிரான்ஸ்
16 டிசெம்பர் 2017
Pub.Date: December 17, 2017
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017