ஏழை மக்கள் வாழக்கூடிய பகுதிக்கு இந்திரா காந்தி மூக்கை பொத்திக்கொண்டு வந்தாா் – மோடி தாக்குதல்

குஜராத் மாநில தோ்தல் பிரசாரத்தின் போது பிரதமா் மோடி, ஏழை மக்கள் வாழக்கூடிய பகுதிக்கு இந்திராகாந்தி மூக்கை பொத்திக்கொண்டு வந்தாா் என்று பழைய கதைகளை கிண்டி வாக்கு சேகாித்தாா்.

குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதம் 4, 9 ந் தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 4-வது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜனதா கட்சி தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது. அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியும், கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

குஜராத்தின் மார்பி நகரில் நேற்று நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது- காங்கிரஸ் கட்சி நிலப்பிரபுத்துவ மனநிலையில் உள்ளது என்பதற்கு ஒரு உதாரணம் கூறுகிறேன். மோர்பி பகுதிக்கு இந்திரா காந்தி வந்தபோது அவர் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகக் கூறி முகத்தை கைக்குட்டையால் மூடிக்கொண்டார்.

இது தொடர்பான புகைப்படம் ‘சித்ரலேகா’ பத்திரிகையில் வந்துள்ளது நினைவு இருக்கிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு இந்த தெரு மணம் வீசுகிறது. மனிதநேயத்தின் மனம் வீசுகிறது என்றார்.ராகுல் காந்தி சோம்நாத் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தது குறித்து மோடி பேசுகையில், “சர்தார் படேல் இல்லாவிட்டால், இங்கு சோம்நாத் கோவில் இல்லை. ஆனால், இங்கு சிலர்(ராகுல்) சோம்நாத் கோவிலில் இப்போது வழிபாடு நடத்துகிறார்கள்.

நான் கேட்கிறேன் வரலாறு உங்களுக்கு தெரியுமா. நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, சோம்நாத் கோவில் கட்டுவதை விரும்பவில்லை. ராஜேந்திர பிரசாத் இந்த கோவிலை திறந்து வைக்க விரும்பவதை நேரு விரும்பவில்லை’’ என்று பல வரலாற்று நிகழ்வுகளை நினைவுக்கூா்ந்து உரையாற்றினாா்.

Ninaivil

திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்
கனடா
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
யாழ். புங்குடுதீவு குறிகட்டுவானை
பிரான்ஸ்
இறப்பு : 13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
யாழ். மிருசுவில் வடக்கை
யாழ். மிருசுவில் வடக்கை
12 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
யாழ். சாவகச்சேரி
கனடா
10 யூலை 2018
Pub.Date: July 13, 2018