கருப்பு நிற தலைமுடியில் தல அஜித்: விசுவாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரெடி?

விசுவாசம் படத்தில் தல அஜித் கருப்பு நிற தலைமுடியில் நடிக்க இருக்கிறாராம்.

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய வி வரிசை படங்களைத் தொடர்ந்து இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் 4வது முறையாக இணைந்துள்ளார். இந்த கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு விசுவாசம் என்று டைட்டில் வைத்துள்ளனர். இப்படத்தின் டைட்டிலை தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வியாழக்கிழமை அன்று அறிவித்தது. இதனை தல ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

இதையடுத்து, தல அஜித்துக்கு ஜோடியாக யார் நடிக்க இருக்கிறார்கள், இசையமைப்பாளர் யார் என்பது தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், அஜித்திற்கான ஹீரோயின்கள் பட்டியலில் தமன்னா, அனுஷ்கா, காஜல் அகர்வால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தயாராகிவிட்டதாகவும், ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதாவது, இதுவரை சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வலம் வந்த தல அஜித், இப்படத்திற்காக கருப்பு நிற தலைமுடியில் நடிக்க இருக்கிறாராம். அதோடு, விவேகம் படத்தை விட இப்படத்தில் இன்னும் கொஞ்சம் எடையை குறைக்க இருக்கிறாராம்.

இதன் காரணமாக விசுவாசம் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களுக்கு பிடிப்பதோடு, நிச்சயமாக சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்றும், இதற்காகத் தான் அனுஷ்கா புதிய ஹேர் ஸ்டைலில் இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி வருகிறது.

Ninaivil

திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
யாழ்ப்பாணம்
கனடா
7 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 9, 2018