அமிதாப்பை விட மிக பெரிய நடிகர்: பிரதமர் மோடி மீது ராகுல் தாக்கு

குஜராத் மாநில சட்டசபை தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, அமிதாப்பை விட பெரிய நடிகர் பிரதமர் மோடி என குற்றம் சாட்டியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.  இதையடுத்து, பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியல்களை வெளியிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சட்டசபை தேர்தலில் பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் குஜராத்தில் நேற்று சுற்றுப்பயணம் செய்தனர். அம்ரேலி, பவநகர் மற்றும் போடட் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

முதல் கட்டமாக அம்ரேலியில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் ஆட்சி அமைக்கும். அப்போது விவசாயிகள் கடனை 10 நாட்களுக்குள் தள்ளுபடி செய்ய ஆணை பிறப்பிக்கப்படும். விவசாயிகளின் நலன்களுக்கு எப்போதும் காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும். சிறு மற்றும் குறு வணிகர்கள் நலன் காக்க திட்டம் கொண்டு வரப்படும்.

பிரதமர் மோடி மக்களை ஏமாற்றி வருகிறார். பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனை விட மோடி பெரிய நடிகர். கண்ணில் எந்த காண்டாக்ட் லென்சும் அணிந்து கொள்ளாமல் கண்ணீர் வடிப்பதில் கைதேர்ந்தவர். தேர்தலுக்கு சில தினங்கள் முன்பாகவே மோடி தனது கட்சி அடையப்போகும் தோல்விக்கு கண்ணீர் வடிக்கப் போகிறார்.

ரபேல் விமானங்கள் வாங்குவது தொடர்பாக தனியாரிடம் ஒப்பந்தம் போட்டது ஏன் என்பது குறித்து விளக்க தயாரா?

இட இதுக்கீடு கேட்டு போராடிய படேல் சமூகத்தை சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டது குறித்த விசாரணைக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

மேலும், விவசாயிகள் பிரச்சினை, பண மதிப்பிழப்பு, ஜி எஸ் டி வரி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பினார். 

Ninaivil

திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்
கனடா
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
திரு கணபதிப்பிள்ளை தாமோதரம்பிள்ளை
யாழ். புங்குடுதீவு குறிகட்டுவானை
பிரான்ஸ்
இறப்பு : 13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
யாழ். மிருசுவில் வடக்கை
யாழ். மிருசுவில் வடக்கை
12 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
யாழ். சாவகச்சேரி
கனடா
10 யூலை 2018
Pub.Date: July 13, 2018