நோயாளிகளுக்கு சிக்கலின்றி சிகிச்சை கிடைக்கும் வகையில் செவிலியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: செவிலியர் கோரிக்கைகளை நிறைவேற்றி நோயாளிகள் தடங்கலின்றி சிகிச்சை பெற தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார், இது குறித்து திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: செவிலியர்களின் கோரிக்கைகளை குதிரை பேர அரசு தொடர்ந்து புறக்கணித்த காரணத்தால்,  தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் திரண்டு வந்துள்ள ஆயிரக்கணக்கான அரசு மருத்துவமனை செவிலியர்களின் போராட்டம் இரவு பகலாகத் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

தங்களின் ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை பலமுறை அரசுக்கு வலியுறுத்தியும், நிறைவேறாத காரணத்தினால், அவர்கள் போராட்டக் களத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். மருத்துவத் துறையிலேயே அதிக பொறுமை காக்க வேண்டிய பணி, செவிலி யர் பணி. அவர்களே பொறுமையிழக்கும் நிலையை குதிரை பேர அரசு ஏற்படுத்தி உள்ளது. உயிர் காக்கும் மருத்துவத் துறை என்பது அத்தியாவசியப் பணிகளின் கீழ் வருகிறது என்ப தால், செவிலியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்பதில் திமுகவுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அரசு இதனை உணராமல், சுகாதாரத் துறை அமைச்சர் பெயரளவுக்கு, குறிப்பிட்ட சிலரோடு மட்டும் பேச்சுவார்த்தை நடத்தி, அதிலும் நம்பகமான எந்தவொரு உத்தரவாதமும் தராமல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நினைத்ததும், காவல் துறை மூலம் மிரட்டல் விடுத்து போராட்டத்தை ஒடுக்க நினைத்தததும் செவிலியர்களின் போராட்ட வேகத்தை அதிகரிக்கச் செய்து விட்டது.

இரவு பகல் என இடைவெளியின்றி பெண்களே முன்னின்று நடத்தும் இப்போராட்டத்தில் ஏற்படக்கூடிய இயற்கையான இடையூறுகளை சமாளிக்கவும் சிரமப்படும் நிலை உள்ளது. நோயாளிகளின் நலன் காக்கும் சேவையில் ஈடுபடும் செவிலியர்களின் நலனைக் காக்கும் வகையில் அரசாங்கம் விரைந்து செயல்பட வேண்டியது அவசியம். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போராட்ட களத்திற்குச் சென்று செவிலியர் களை சந்தித்து, அவர்களின் பிரநிநிதிகளுடன் பேசி, கோரிக்கைகளை ஏற்று உத்தரவாதம் அளிப்பதுடன், அவர்களின் அடிப்படைக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி, போராட்டத்தை சுமூகமுறையில் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதை திமுக வலியுறுத்துகிறது.

அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவில் செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில், பணியில் உள்ள செவிலியர்களின் கோரிக்கைகளை யும் நிறைவேற்றாமல் புறக்கணிக்கும் குதிரை பேர அதிமுக அரசு, தனது அலட்சியத்தால் நோயாளிகளின் உயிருடன் விளையாடுகிறது.  இந்த அவலநிலை நீடிக்காதபடி உடனடியாக செயல்பட்டு, செவிலியர்களின் போராட்டம் முடிவுக்கு வரும் வகையில், கோரிக்கைகள் நிறைவேற்றப்பட விஜயபாஸ்கர் நேரடியாக வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வழிவகை செய்து நோயாளிகளு க்குத் தடங்கலின்றி சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்து கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு: அமெரிக்க தமிழ் சங்க தலைவர் கால்டுவெல் வேல்நம்பி சென்னையில் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ்க் கல்வி மற்றும் தமிழ் மொழி ஆய்வுகள் மேற்கொள் ளும் வகையில் கல்விசார் இருக்கை அமைக்க நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள, மெட்ரோ பிளஸ் அமெரிக்க தமிழ்சங்கத்தின் தலைவர் கால்டுவெல் வேல்நம்பி மற்றும் திராவிடர் கழக பிரசாரக்குழுச் செயலாளர் அருள்மொழி ஆகியோர் நேற்று சென்னை வந்தனர்.   அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள்.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018