சூர்யா, விஷாலுடன் மோதிக் கொள்ளும் விஜய் சேதுபதி!

சூர்யா மற்றும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் வரும் பொங்கலன்று திரைக்கு வரவுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் தானா சேர்ந்த கூட்டம். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வரும் பொங்கலன்று திரைக்கு வரவுள்ளது என்று இப்படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

இதே போன்று, விஷாலின் ஆக்ஷன் த்ரில்லர் படமான இரும்பு திரையும் பொங்கலன்று தான் வெளியாக உள்ளது. விஷாலுடன் இணைந்து சமந்தா மற்றும் அர்ஜூன் ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், ஆறுமுக குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், காயத்ரி, நிஹாரிகா ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன். நேற்று இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படத்தை அம்மா நாராயண புரோடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த நிலையில், இப்படத்தை வரும் ஜனவரி மாதம் வெளியிட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஜனவரி என்றால் இப்படமும் பொங்கலைத் தான் குறி வைக்கிறது.

அதன் காரணமாக, விஜய் சேதுபதி, சூர்யா, விஷால் ஆகிய ஹீரோக்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவதால், இப்படங்களில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
யாழ்ப்பாணம்
கனடா
7 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 9, 2018