நான் மற்றும் எனது குடும்பத்தினர் அனைவரும் சிவபக்தர்கள்: பா.ஜ.க.வுக்கு ராகுல் பதிலடி

நான் மற்றும் எனது குடும்பத்தினர் அனைவரும் சிவபக்தர்கள் என குஜராத் சோம்நாத் கோயில் வருகை குறித்து காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

குஜராத் மாநில சட்டசபைக்கு டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி குஜராத் மாநிலத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார். அங்கு புகழ்பெற்ற சோம்நாத் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அந்த கோவிலில் ராகுல் காந்தி இந்து அல்லாதோர் வருகை பட்டியலில் கையெழுத்து இட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் நேற்று வைரலாக பரவியது. இந்த புகைப்படம் பா.ஜ.க.வினரால் கடும் விமர்சனம் மற்றும் கேள்விகளுடன் பரப்பப்பட்டது. 

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசுகையில், சோம்நாத் கோயிலுக்கு சென்ற நான் பார்வையாளர்கள் புத்தகத்தில் கையெழுத்து மட்டுமே போட்டேன். ஆனால் பா.ஜ.வினர் தான் மத பிரச்னையை குறிப்பிட்டு விஷமம் செய்துள்ளனர்.

எனது பாட்டி (இந்திரா காந்தி) மற்றும் எனது குடும்பத்தினர் அனைவரும் சிவ பக்தர்கள். மதத்தின் மீதான நம்பிக்கை தனிப்பட்ட விஷயம். நாங்கள் மதத்தை வைத்து வியாபாரம் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.வினர் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Ninaivil

திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
யாழ். காரைநகர்
சுண்டுக்குளி, கனடா
19 யூலை 2018
Pub.Date: July 21, 2018
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018