ஓகி புயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் பிரதமர் போனில் விசாரித்தார்

ஓகி புயல் பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேற்று  இரவு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு கேட்டறிந்தார்.

இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஓகி புயலால் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளானது.

குறிப்பாக கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர்கள் மற்றும் மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள், நிவாரணப்பணிகளை துரிதப்படுத்த அனுப்பியுள்ளதாகவும், இன்றைய தினம் நிவாரணப்பணிகள், முழுவீச்சில் நடைபெறுவதாகவும் பிரதமரிடம் முதல்வர் தெரிவித்தார். 

மேலும், மின் விநியோகத்தை சீராக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் 76 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். எஞ்சிய 11 படகுகளில் உள்ள 30 மீனவர்களை துரிதமாக மீட்க கடலோர பாதுகாப்புப்படை உதவியுடன் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

ஓகி புயலினால் ஏற்பட்ட சேத விபரங்களை மதிப்பீடு செய்த பின்னர், மத்திய அரசின் நிதியுதவி கோரி விரைவில் அறிக்கை அனுப்பப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். அதற்கு பிரதமரும் வேண்டிய உதவிகளை உடனடியாக செய்வதாக  தெரிவித்தார்கள். 

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018