எதிர்க்கட்சிகளின் விமர்சனம் தவிடுபொடி: உ.பி. உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., அபாரம்!

கடந்த 2014ஆம் ஆண்டு இருந்த நரேந்திர மோடியின் அலை ஓய்ந்துவிட்டது என்றும் குஜராத் சட்டமன்ற தேர்தல் உள்பட இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் பாஜகவுக்கு இறங்குமுகம் தான் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்தன. இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளது.

இந்த தேர்தலில் உபியில் மொத்தமுள்ள 16 மேயர் பதவிகளில் 14 இடங்களில் பாஜக வெற்றி வாகை சூடியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி வெறும் இரண்டு மேயர் இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

அதேபோல் நகராட்சி தலைவர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில், மொத்தமுள்ள, 198 இடங்களில், பா.ஜ., 47ல் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ், 18 இடங்களிலும், சமாஜ்வாதி, 29 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் வெறும் 5 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி காரணமாக பொதுமக்கள் பாஜகவின் மீது அதிருப்தியாக உள்ளனர் என்ற வாதம் இந்த தேர்தல் முடிவால் தவிடுபொடியாகியுள்ளது.

வரும் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் குஜராத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த முடிவு பாஜகவுக்கு உத்வேகத்தையும் ஊக்கத்தையும் அளித்துள்ளதாக கூறப்படுகிறது

Ninaivil

திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017
திரு அருணாசலம் வேல்முருகு
திரு அருணாசலம் வேல்முருகு
அனுராதபுரம்
யாழ். உரும்பிராய் கோப்பாய், கனடா
8 டிசெம்பர் 2017
Pub.Date: December 8, 2017