இலங்கைக்கு முழுமையாக ஒர்க் அவுட்டாகுமா ‘டிராமா’ : இந்தியா அசத்தல் ஆரம்பம்!

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், இலங்கை அணிக்கு மாத்யூஸ் அரைசதம் அடித்து கைகொடுக்க, இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்தது. 

இந்தியா வந்துள்ள இலங்கை அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதலிரண்டு டெஸ்டின் முடிவில், இந்திய அணி, 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் டெல்லியில் நடக்கிறது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 371 ரன்கள் எடுத்திருந்தது. கோலி (156), ரோகித் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.

இரண்டாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு கேப்டன் கோலி, டெஸ்ட் அரங்கில் தனது 6வது இரட்டைசதத்தை பதிவு செய்தார். இதில் டெல்லியில் நிலவிய காற்று மாசுபாட்டை காரணம் காட்டி இலங்கை அணி வீரர்களை விளையாடாமல் போட்டியில் தடை ஏற்படுத்தி கொண்டே இருந்தனர்.

இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 536 ரன்கள் எடுத்த போது, இலங்கை வீரர்களின் வாக்கு வாதத்தால், கடுப்பான கோலி, முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தார்.இதன் பின் முதல் இன்னிங்சை துவங்கிய இலங்கை அணிக்கு கருணரத்னேவை, முதல் பந்திலேயே வெளியேற்றினார் ஷமி. பெரேரா (42) ஓரளவு கொடுத்தார். தனஞ்சயாவை (1) இஷாந்த் சர்மா பெவிலியனுக்கு அனுப்பினார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், மறுமுனையில் அதிர்ஷ்டத்தால் வாய்ப்பு பெற்ற மாத்யூஸ் அரைசதம் கடந்தார்.

சண்டிமால் ஓரளவு மாத்யூசுக்கு கம்பெனி கொடுக்க, போதிய வெளிச்சமின்மை காரணமாக இரண்டாவது நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. இலங்கை அணி, முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 405 ரன்கள் பின் தங்கியுள்ளது. மாத்யூஸ் (57), சண்டிமால் (25) அவுட்டாகாமல் இருந்தனர்.

Ninaivil

திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம்
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம்
யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு
யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு பரமலிங்கம் சுப்பிரமணியம்
திரு பரமலிங்கம் சுப்பிரமணியம்
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018