காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல்

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 16ம் தேதி நடக்கிறது.

இதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு இன்று கடைசிநாள். மனுக்கள் நாளை பரிசீலனை செய்யப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தலைவர் பதவிக்கு, கட்சியின் தற்போதைய துணைத் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இன்று அவர் வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார். இதுவரை இப்பதவிக்கு போட்டியிடுவதற்காக வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. 

இந்நிலையில், தலைவர் பதவிக்கு ராகுல் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில், அவருடைய பெயரை முன்மொழிந்து காங்கிரஸ் தலைவர் சோனியா, மன்மோகன் சிங், பஞ்சாப் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான அமரீந்தர் சிங் நேற்று கையெழுத்திட்டனர். இது தொடர்பாக சண்டிகரில் நேற்று அமரீந்தர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ராகுல் சிறுபிள்ளையாக இருக்கும் போதிருந்தே அவரை எனக்கு தெரியும். அப்போதே, ஒருநாள் இவர் மிக உயர்ந்த நிலைக்கு வருவார் என நினைத்தேன். 

கட்சியின் தலைவர் பதவியை ராகுல் ஏற்றால், கட்சிக்கு இளரத்தம் பாய்ச்சியதுபோல் இருக்கும். 2019 மக்களவை தேர்தலில் கட்சிக்கு மிகப்பெரிய புத்துணர்ச்சியை அளிக்கும். ராகுலின் சமீபத்திய செயல்பாடுகள், அவரை மிகவும் முதிர்ந்த அரசியல்வாதியாக காட்டுகிறது. குஜராத்தில் கடந்த சில நாட்களாக மிகப்பெரிய கூட்டத்தை அவர் ஈர்த்துள்ளார். கட்சித் தலைவர் பதவிக்கு அவருடைய பெயரை முன்மொழியும் பெருமை எனக்கு கிடைத்ததை கவுரவமாக கருதுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018