23 தமிழர்கள் உட்பட 321 மீனவர்கள் மகாராஷ்டிராவில் கரை ஒதுங்கியுள்ளனர் : மகாராஷ்டிரா முதல்வர் தகவல்

 ஓகி புயலில் சிக்கி கடலில் தத்தளித்த 28 படகுகளை சேர்ந்த 321 மீனவர்கள் மகாராஷ்டிராவின் ரத்னகிரி கடற்கரை பகுதியில் பத்திரமாக கரை ஒதுங்கி இருப்பதாக அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த மீனவர்களில் 23 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். 3 பேர் கேரளாவையும் 2 பேர் கர்நாடகா மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் என்று முதல்வர் பட்நவிஸ் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். கரை ஒதுங்கிய படகுகள் தற்போது ரத்னகிரியில் உள்ள மிர்யா பந்தர் படகுத்துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அனைத்து மீனவர்களும் பாதுகாப்பாக உள்ளனர்.

அவர்கள் அனைவரையும் அதிகாரிகள் மிகவும் பரிவாக கவனித்து வருகின்றனர் என்று முதல்வர் தெரிவித்தார். முதல்வர் பட்நவிஸ் நேற்று முன்தினம் தனது டிவிட்டர் பக்கத்தில், 68 மீன்பிடி படகுகள் 952 மீனவர்களுடன் சிந்துதுர்க் கடற்கரையில் ஒதுங்கி இருப்பதாகவும் இதில் 66 படகுகள் கேரளாவையும் 2 படகுகள் தமிழ்நாட்டையும் சேர்ந்தவை என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் கரை ஒதுங்கிய மீனவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும்படி மகாராஷ்டிரா கடல்சார் வாரியம் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அதில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது மேலும் 28 படகுகளில் 321 மீனவர்கள் ரத்னகிரி கடற்கரையில் கரை ஒதுங்கி உள்ளனர்.

இதற்கிடையே முதல்வர் பட்நவிஸ் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நன்றி தெரிவித்து டிவிட்டரில் செய்தி வெளியிட்டு இருக்கிறார். அதில், “மீனவர்கள் பிரச்னையின் அவசரத் தன்மையை உணர்ந்து செயல்பட்டிருக்கும் முதல்வர் பட்நவிசுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Ninaivil

திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018