இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்தியா 536 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி தொடக்க நாளில் 4 விக்கெட்டுக்கு 371 ரன்கள் குவித்தது. கேப்டன் விராட் கோலி 156 ரன்களுடனும், ரோகித் சர்மா 6 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 2-வது நாளான நேற்றும் இந்திய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தினர். 

விராட் கோலி- ரோகித் சர்மா கூட்டணி அணியின் ஸ்கோருக்கு மேலும் வலுவூட்டியது. கோலி 195 ரன்களில் இருந்த போது இலங்கை வீரர்கள் எல்.பி.டபிள்யூ. கேட்டு டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்தனர். ரீப்ளேயில் பந்து பேட்டில் உரசி அதன் பிறகே காலுறையில் பட்டது தெரிந்ததால், கோலி தப்பினார். மறு ஓவரிலேயே கோலி தனது 6-வது இரட்டை சதத்தை எட்டினார். இது கோலியின் சொந்த ஊர் என்பதால் ரசிகர்களின் ஆரவாரம் அரங்கை அதிர வைத்தது.

ரோகித் சர்மாவும் இலங்கை பந்து வீச்சை வறுத்தெடுக்க தவறவில்லை. சன்டகன், பெரேரா ஓவர்களில் சிக்சர்களை பறக்க விட்ட ரோகித் சர்மா 8-வது அரைசதத்தை நிறைவு செய்தார். உணவு இடைவேளைக்கு முந்தைய ஓவரில் ரோகித் சர்மா 65 ரன்களில் (102 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து அஸ்வின் வந்தார்.

உணவு இடைவேளைக்கு பிறகு காற்று மாசு பிரச்சினையை கையில் எடுத்த இலங்கை வீரர்கள் சுவாச முகமூடி அணிந்தபடி விளையாடினர். இந்த விவகாரத்தால் மூன்று முறை ஆட்டத்தை நிறுத்த வேண்டியதானது. இதனால் இந்தியாவின் உத்வேகம் தளர்ந்து கவனச்சிதறல் ஏற்பட்டது. அஸ்வின் 4 ரன்னிலும், விராட் கோலி 243 ரன்களிலும் (287 பந்து, 25 பவுண்டரி) அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். 

இதில் கோலி, சன்டகனின் சுழலில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
இலங்கை வீரர்களின் இந்த வித்தியாசமான அணுகுமுறையால் எரிச்சலடைந்த இந்திய கேப்டன் விராட் கோலி 7 விக்கெட்டுக்கு 536 ரன்கள் குவித்திருந்த போது இன்னிங்சை முடித்துக்கொள்வதாக அறிவித்தார். 600 ரன்களை நெருங்கும் போதே இந்திய அணி டிக்ளேர் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோலியின் அதிரடி முடிவு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அப்போது விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா 9 ரன்னுடனும், ரவீந்திர ஜடேஜா 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இது போன்ற புதுமையான நெருக்கடி உருவாகி இந்திய அணி ‘டிக்ளேர்’ செய்வது இது ஒன்றும் முதல்முறை அல்ல. 1976-ம் ஆண்டு கிங்ஸ்டனில் நடந்த டெஸ்டில், வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர்கள் மைக்கேல் ஹோல்டிங், வெய்ன் டேனியல் ஆகியோர் உயரமான புல்டாஸ்களாக பந்துவீசி அச்சுறுத்தியதுடன், சில இந்திய வீரர்களுக்கு காயத்தை ஏற்படுத்தினர். மேலும் காயமடைவதை தவிர்க்க 2-வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 97 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த இந்திய அணி ‘டிக்ளேர்’ செய்து, தோல்வியையும் தழுவியது நினைவு கூரத்தக்கது.

அடுத்து இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. கருணாரத்னேவும், தில்ருவான் பெரேராவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமியும், இஷாந்த் ஷர்மாவும் சரமாரியாக தாக்குதல் தொடுத்தனர். ஷமியின் முதல் பந்திலேயே கருணாரத்னே (0) வெளியேற்றப்பட்டார். அடுத்து வந்த தனஞ்ஜெயா டி சில்வாவை (1 ரன்) இஷாந்த் சர்மா காலி செய்தார். தொடர்ந்து மேத்யூஸ் நுழைந்தார். ஷமியும், இஷாந்தும் சரியான அளவில் பந்து வீசி இலங்கை பேட்ஸ்மேன்களை திணறடித்தனர்.

தில்ருவான் பெரேரா 16 ரன்னில் இருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் நின்ற தவான் நழுவ விட்டார். இதே போல் மேத்யூஸ் 6 ரன்னில் ஆடிக்கொண்டிருந்த போது வழங்கிய ‘லட்டு’ போன்ற எளிதான கேட்ச் வாய்ப்பை 2-வது ஸ்லிப்பில் நின்ற விராட் கோலி கோட்டை விட்டார். பீல்டிங்கில் மட்டும் கச்சிதமாக செயல்பட்டிருந்தால் இலங்கையின் நிலைமை மோசமாக போய் இருக்கும்.

கண்டத்தில் இருந்து தப்பி பிழைத்த மேத்யூஸ், இஷாந்த் ஷர்மாவின் அடுத்த ஓவரில் 3 பவுண்டரிகளை விரட்டினார். அணியின் ஸ்கோர் 75 ரன்களாக உயர்ந்த போது தில்ருவான் பெரேரா 42 ரன்களில் (54 பந்து, 9 பவுண்டரி) எல்.பி.டபிள்யூ. ஆனார். இதன் பிறகு கேப்டன் தினேஷ் சன்டிமால், மேத்யூசுடன் கைகோர்த்தார். இருவரும் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். மேத்யூஸ், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பந்தை சிக்சருக்கு தூக்கியடித்து அரைசதத்தை கடந்தார்.

2-வது நாள் ஆட்ட நேர இறுதியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. மேத்யூஸ் 57 ரன்களுடனும் (118 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), சன்டிமால் 25 ரன்களுடனும் (81 பந்து, 3 பவுண்டரி) களத்தில் உள்ளனர். இலங்கை அணி இன்னும் 405 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

ஸ்கோர் போர்டு - முதல் இன்னிங்ஸ் இந்தியா

விஜய் (ஸ்டம்பிங்) டிக்வெல்லா
(பி) சன்டகன் 155
ஷிகர் தவான் (சி) லக்மல்
(பி) பெரேரா 23
புஜாரா (சி) சமரவிக்ரமா
(பி) காமகே 23
விராட் கோலி எல்.பி.டபிள்யூ
(பி) சன்டகன் 243
ரஹானே (ஸ்டம்பிங்) டிக்
வெல்லா (பி) சன்டகன் 1
ரோகித் சர்மா (சி) டிக்வெல்லா
(பி) சன்டகன் 65
அஸ்வின் (சி) பெரேரா
(பி) காமகே 4
விருத்திமான் சஹா
(நாட்-அவுட்) 9
ரவீந்திர ஜடேஜா (நாட்-அவுட்) 5
எக்ஸ்டிரா 8
மொத்தம் (127.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு டிக்ளேர்) 536

விக்கெட் வீழ்ச்சி: 1-42, 2-78, 3-361, 4-365, 5-500, 6-519, 7-523

பந்து வீச்சு விவரம்

லக்மல் 21.2-2-80-0
காமகே 25.3-7-95-2
தில்ருவான் பெரேரா 31.1-0-145-1

லக்‌ஷன் சன்டகன் 33.5-1-167-4
தனஞ்ஜெயா டி சில்வா 16-0-48-0

இலங்கை

கருணாரத்னே (சி) சஹா
(பி) ஷமி 0
தில்ருவான் பெரேரா
எல்.பி.டபிள்யூ (பி) ஜடேஜா 42
தனஞ்ஜெயா டி சில்வா
எல்.பி.டபிள்யூ (பி) இஷாந்த் 1
மேத்யூஸ் (நாட்-அவுட்) 57
சன்டிமால் (நாட்-அவுட்) 25
எக்ஸ்டிரா 6

மொத்தம் (44.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு) 131
விக்கெட் வீழ்ச்சி: 1-0, 2-14, 3-75

பந்துவீச்சு விவரம்

முகமது ஷமி 11-3-30-1
இஷாந்த் ஷர்மா 10-4-44-1
ஜடேஜா 14.3-6-24-1
அஸ்வின் 9-3-28-0

Ninaivil

திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
யாழ்ப்பாணம்.
லண்டன்
8 மார்ச் 2018
Pub.Date: March 13, 2018
திருமதி கலைவாணி பாலச்சந்திரன்
திருமதி கலைவாணி பாலச்சந்திரன்
யாழ். வண்ணார்பண்ணை
ஜெர்மனி
6 மார்ச் 2018
Pub.Date: March 9, 2018