ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சித்தலைவர் கடிதம்

பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை அதன் உரிமையாளர்களிடத்தில் கையளிப்பதற்கு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் திங்கட்கிழமை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு மாகாணத்தில் ஆயுதப்படையினர்  தங்கியிருக்கும்  தனியாருக்கு  சொந்தமான காணிகள் தொடர்பான இரண்டு விடயங்கள் பற்றி தங்கள்  கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். இக்காணிகள் அதன் உரிமையாளர்களான குடிமக்களுக்காக கூடிய விரைவில் விடுவிக்கப்படவேண்டும்.

இக்காணிகளில் ஆயுதப்படையினர் தங்கியிருக்கின்றனர்.  காணிகளுக்கு உரிமையாளர்களாகிய குடிமக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி அக்காணிகளுக்கு முன்பாக  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டம், வலிகாமம் வடக்குக் காணியில் 25 வருடங்களுக்கு மேலாக தரைப்படையினர் இருந்து வருகின்றனர். பாரிய தாக்குதல் ஆயுதங்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்து வந்த காலத்தில், அவர்கள் ஆயுதப் படைத்தளங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த காரணத்தால் இக்காணிகளில் ஆயுதப்படையினர் நிலை கொண்டிருந்தனர்.

இத்தகைய நிலைமை பல வருடங்களுக்கு முன்பே முடிவுக்கு வந்துவிட்டது. இக்காணிகள் பல பரம்பரை காலமாக குடிமக்களால் அவர்களது குடியிருப்புக்காகவும்,விவசாய செய்கைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டவையாகும்.

குடிமக்களுக்கு சொந்தமான இக்காணிகளை மீண்டும் கையளிக்காது தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு எவ்விதமான நியாயபூர்வமான காரணங்களும் இல்லை. இக்காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ள போதிலும் அந்த உறுதிமொழிகள் இன்னமும் காப்பாற்றப்படவில்லையென மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எனவே யாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கில் உள்ள  இந்தக் காணிகள் அதன் உரிமையாளர்களான குடிமக்களுக்கு விடுவிக்கப்படுவதற்கான மிக விரைவான செயற்ப்பாடுகளை மேற்கொள்ளுமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு காணிகளிலும்  கூட 8 வருடங்களுக்கு மேலாக ஆயுதப்படையினர் நிலைகொண்டு தங்கியுள்ளனர். இக்காணிகளும் அதற்கு உரிமையாளர்களாகிய குடிமக்களால் குடியிருப்புக்காகவும் விவசாய செய்கைகளுக்காகவும்

பயன்படுத்தப்பட்டு வந்தவையாகும். இக்காணிகளை அதன் உரிமையாளர்களாகிய குடிமக்களிடம் மீள ஒப்படைக்கப்படாமைக்கு எவ்விதமான நியாயபூர்வமான காரணங்களும் இருக்க முடியாது

எனவே முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கேப்பாபுலவு காணிகளை அதன் உரிமையாளர்களாகிய குடிமக்களிடம் மீளக் கையளிப்பதற்கு தேவையான செயற்ப்பாடுகளை மிக விரைவில் மேற்கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

குடி மக்களுக்கு சொந்தமான இக்காணிகளில் ஆயுதப்படையினர் தொடர்ந்தும் தங்கியிருப்பது, நாட்டின் சட்டங்களை மீறுகின்ற செயலாகும் என்பது தெளிவாக தெரிகின்றது. இத்தகைய நிலைமை தொடரக் கூடாது

இக்காணிகளை அதன் உரிமையாளர்களாகிய குடிமக்களிடம் கையளிக்கப்படுவதற்கு தேவையான அறிவுறுத்தல்களை உரிய அதிகாரிகளுக்கு உடன் வழங்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறேன் என்றுள்ளது.

Ninaivil

திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
யாழ்ப்பாணம்.
பிரான்ஸ்
16 டிசெம்பர் 2017
Pub.Date: December 17, 2017
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017