ஆர்.கே.நகரில் பிரச்சாரம் தீவிரம்... குமரியில் தினகரன் ஆய்வு

கன்னியாகுமரியில் ஒகி புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தினகரன் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆர்.கே.நகரில் வேட்பாளராக களமிறங்கியுள்ள தினகரன் இன்று தனது ஆதரவாளர்களுடன் கன்னியாகுமரி வந்தார். திருப்பதிசாரம் என்ற பகுதியில் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அப்பகுதி மக்களிடம் அவர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது கன்னியாகுமரி மாவட்ட அதிமுக அம்மா அணியின் பொறுப்பாளர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

ஆய்விற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தினகரன் ஒகி புயலால் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளதாகவும் மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழக அரசு உடனடியாக மக்களின் குறைகளை கேட்டறிந்து அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தினகரன் தெரிவித்தார்.

புயல் பாதிப்புகள் நேற்று குமரி வந்து பார்வையிட்டு சென்ற துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வம் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்திருந்தநிலையில் இன்று தினகரன் மற்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.  

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018