புயல்-மழை சேதங்களை ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு

‘ஒகி’ புயல் குமரி மாவட்டத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மாவட்டம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மரங்களும், 4 ஆயிரம் மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன. இதனால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் மின்சாரம் வழங்கப்படாததால் இருளில் மூழ்கி கிடக்கிறது.

விளை நிலங்களில் வெள்ளம் புகுந்ததால் குமரி மாவட்டத்தின் விவசாயமும் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிட்டு இருந்த நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது. ஏராளமான தென்னை, வாழை, ரப்பர் உள்ளிட்ட மரங்கள் முறிந்து சேதமடைந்துள்ளன. மரவள்ளிக் கிழங்கு, கிராம்பு, மிளகு போன்ற பயிர்களும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

மீட்பு, நிவாரண பணிகளை முடுக்கி விடுவதற்காக அமைச்சர்கள் ஜெயகுமார், தங்கமணி, உதயகுமார் ஆகியோர் குமரி மாவட்டத்திலேயே முகாமிட்டுள்ளனர்.

இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு நிலவரங்களை ஆய்வு செய்வதற்காகவும், மீட்பு மற்றும் நிவாரண பணிகளை தீவிரப்படுத்துவதற்காகவும் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதியம் குமரி மாவட்டம் வந்தார்.
பூதப்பாண்டி அருகே தெரிசனங்கோப்பு பகுதிக்கு சென்று மழை வெள்ளத்தில் மூழ்கி இருந்த நெல் வயல்களையும், சூறைக்காற்றில் முறிந்து விழுந்த வாழைகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து சோமையார்புரம், தடிக்காரன்கோணம் ஆகிய பகுதிகளில் முறிந்து கிடந்த ரப்பர் மரங்களை பார்வையிட்டார்.

தடிக்காரன்கோணம் ரப்பர் தோட்டத்தில் செல்லும் போது குறுகலான பாதையில் தண்ணீர் பாய்ந்து சென்றது. அதனை கடந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம் சேதங் களை பார்வையிட்டார். வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகளிடமும் சேதவிவரங்களை கேட்டறிந்தார்.

பின்னர் அவர் காரில் நாகர்கோவில் நோக்கி வந்தார். வரும் வழியில் சாலையோரங்களில் ஆங்காங்கே திரண்டு நின்ற விவசாயிகளும், பொதுமக்களும் ஓ.பன்னீர்செல்வம் காரை நிறுத்தி புயலில் சேதமடைந்த குடியிருப்புகள், சேதமான பயிர் விவரங்களை தெரிவித்தனர்.
விவசாயிகளின் குறைகளை அவர் பொறுமையாக கேட்டுக்கொண்டார். அது சம்பந்தமாக அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டார்.

பின்னர் நாகர்கோவிலுக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் புயலால் தண்ணீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்கள் மற்றும் சேதமடைந்த வாழை, ரப்பர் மரங்கள் விவரம் குறித்து கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்த பிறகு நிவாரணம் வழங்கப்படும். என்னிடம் விவசாயிகள் பலர் சேதங்கள் குறித்து தெரிவித்தனர். கணக்கெடுக்கும் பணி முடிவடைந்து கலெக்டரால் முன்மொழியப்படும் நிவாரண நிதி அப்படியே ஒதுக்கீடு செய்யப்பட்டு உரியவர்களுக்கு வழங்கப்படும்.

காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியில் கடலோர காவல்படை, கடற்படை கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

புயலினால் சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் நிறுவப்பட்டு பகுதி, பகுதியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை அதிகாரிகள் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Ninaivil

திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
யாழ்ப்பாணம்
கனடா
7 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 9, 2018