காங்கிரசுக்கு தலைவராகும் விவகாரம்: ராகுல் காந்தி மீது பிரதமர் மோடி கடும் தாக்கு

காங்கிரஸ் கட்சிக்கு தலைவராகும் விவகாரத்தில் ராகுல் காந்தியை பிரதமர் மோடி கடுமையாக தாக்கி பேசினார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் 16-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் கட்சியின் துணைத்தலைவரான ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது. அவர் தனது வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார்.

காங்கிரசுக்கு ஒரு குடும்பத்தினரே தொடர்ந்து தலைவராவதை பிரதமர் மோடி குறை கூறியுள்ளார். குஜராத்தின் தரம்பூரில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய அவர், ராகுல் காந்தியை தாக்கி பேசினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

அவுரங்கசீப் ஆட்சி

காங்கிரஸ் கட்சி திவாலாகி விட்டது. அது, ஊழல் வழக்கில் (நேஷனல் ஹெரால்டு வழக்கு) ஜாமீனில் இருக்கும் ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்க இருக்கிறது.

‘முகலாய ஆட்சிக்காலத்தில் தேர்தல் நடைபெற்றதா? ஜஹாங்கிருக்கு பின் ஷாஜகான் அரசரானார், அதற்கு தேர்தல் நடத்தப்பட்டதா? அதைப்போல ஷாஜகானுக்கு பிறகு அவுரங்கசீப் தான் அரசர் என்பது அனைவருக்கும் தெரியும்’ என காங்கிரஸ் அரசில் மந்திரியாக இருந்த மணிசங்கர் அய்யர் சொல்கிறார்.

அப்படியானால் காங்கிரஸ் கட்சி, ஒரு குடும்ப கட்சி என்பதை அது ஒத்துக்கொள்கிறதா? எங்களுக்கு இந்த அவுரங்கசீப் ஆட்சி தேவையில்லை.

மதசார்பற்ற தன்மை

குஜராத்தில் கடந்த 2002, 2007, 2012-ம் ஆண்டு நடந்த தேர்தல்களில் காங்கிரசின் ஒரே வாதமாக இருந்தது, ‘பா.ஜனதா ஒரு மதவாத கட்சி, முஸ்லிம்களுக்கு எதிரானது’ என்பதுதான். ஆனால் 2017 தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனது குணநலன்கள் மற்றும் செயல்படும் முறையை மாற்றி விட்டது. மதசார்பற்ற தன்மை குறித்து அவர்கள் பேசுவதில்லை.

மதசார்பற்ற தன்மை-மதவாதம் தொடர்பான விவாதத்தில் இந்த மவுனம் ஏன்? மதவாதம் தொடர்பாக பா.ஜனதாவை தாக்குவது தவறு என்பதை காங்கிரசும் ஒப்புக்கொண்டு உள்ளது. இது முஸ்லிம்கள் ஓட்டை பெறுவதற்கான நோக்கம் மட்டுமே.

இதை குஜராத் முஸ்லிம்கள் புரிந்து கொண்டுள்ளனர். காங்கிரசின் பொய் அம்பலமாகி விட்டது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். 

Ninaivil

திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
யாழ்ப்பாணம்
கனடா
7 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 9, 2018