ஜெயலலிதா மர்ம மரணம் 60 பேருக்கு சம்மன் : அரசு டாக்டர்களிடம் இன்று விசாரணை

சென்னை : ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் முன்பு ஆஜராக 60 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் ஒன்றை தமிழக அரசு அமைத்தது. அவர்இ ஜெயலலிதா மரணம் குறித்து தனது விசாரணையை தொடங்கினார். இந்த விசாரணை ஆணையத்துக்கு இதுவரை 12 பிரமாண பத்திரம் மற்றும் 75க்கும் மேற்பட்ட புகார் கடிதங்கள் வந்துள்ளது. முதற்கட்டமாக திமுக மருத்துவர் அணியை சேர்ந்த சரவணனிடம் நவம்பர் 22இ23ம் தேதி விசாரணை நடத்தினார். அப்போதுஇ  ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சைக்கும்இ மருத்துவமனை அளித்துள்ள பிரமாண பத்திரத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளதாக ஆதாரத்துடன் கூறியிருந்தார். ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது தமிழக அரசு சார்பில் ஒரு டாக்டர் குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

அந்த டாக்டர்கள் குழுவில் இடம் பெற்றிருந்த சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் நாராயண பாபுஇ முன்னாள் மருத்துவக்கல்லூரி இயக்குநர் டாக்டர் விமலா ஆகியோரும் விசாரணை ஆணையம் முன்பு ஆஜரானார்கள். அவர்களிடம் நீதிபதி ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டதுஇ ஜெயலலிதாவுக்கு எந்தெந்த டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அப்போது அவர்கள் அளித்த ரிப்போர்ட் விவரம்இ சிகிச்சையின் போது ஜெயலலிதாவுடன் யார்இ யார் இருந்தார்கள் என்று சரமாரியாக கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதில்இ அவர்கள் அளித்த வாக்குமூலத்தை நீதிபதி பதிவு செய்து ெகாண்டார்.  இதை தொடர்ந்து மேலும்இ பலரிடம் விசாரணை நடத்த விசாரணை ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி சசிகலா உறவினர்கள் 3 பேர்இ அப்போலோ டாக்டர்கள்இ அரசு மருத்துவர்கள் உட்பட 60 பேருக்கு சம்மன் அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது.

இதில்இ அரசு மருத்துவர்கள் இரண்டு பேர் இன்று காலை 10.30 மணியளவில் விசாரணை கமிஷன் முன்பு ஆஜராகின்றனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. தொடர்ந்து நாளை (6ம் தேதி) தீபா கணவர் மாதவன்இ அரசு மருத்துவர் ஒருவரிடம்இ நாளை மறுநாள் (7ம் தேதி) இரண்டு மருத்துவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது. அதன்பிறகு அடுத்த வாரத்தில் சசிகலா உறவினர்களிடம் விசாரணை நடக்கிறது.  விசாரணையில் ஆஜராவதற்காகஇ தனிஇதனியாக தபால் மூலமோஇ நேரில் சென்றோ சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்று விசாரணை கமிஷன் அலுவலகம் தெரிவித்துள்ளது.  

தேர்தல் முடிந்த பின் தீபாவிடம் விசாரணை

ஆர்.ேக.நகர் இடைதேர்தலில் தீபா வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர்இ தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுவார். எனவேஇ அவரை தேர்தல் முடிந்த பின் விசாரிக்க விசாரணை கமிஷன் முடிவு செய்துள்ளது. விரைவில்இ அவருக்கு விசாரணை கமிஷன் முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்படும் என்று விசாரணை கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்தன.

Ninaivil

திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
யாழ். காரைநகர்
சுண்டுக்குளி, கனடா
19 யூலை 2018
Pub.Date: July 21, 2018
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018