வறுமையைக் குறைத்து தேசிய மட்டத்திலும் பங்களிப்பவர்களாக மாறவேண்டும்

அரசாங்கத்தால் செயற்படுத்தப்படுகின்ற திட்டங்களுடன் இணைந்து கொண்டு பங்களிப்பினையும் வழங்கி உங்களுடைய குடும்ப வருமானத்தை அதிகரித்துக் கொள்வதுடன், பிரதேச மற்றும் மாவட்டத்தின் வறுமையைக் குறைத்து தேசிய மட்டத்திலும் பங்களிப்பு வழங்குபவர்களாக நீங்கள் மாற வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் பொருளாதார வலுப்படுத்தல் திட்டத்தின் கீழ் நேற்று நடைபெற்ற 102 பயனாளிகளுக்கு 4.8 மில்லியன் பெறுமதியான தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இவ்வாறு குறிப்பிட்டார்.


பட்டிப்பளையிலுள்ள மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி கௌரி தினேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்,


கடந்த காலங்களை விடவும் இந்த வருடத்தில் வறுமை சற்றுக் குறைந்திருக்கிறது. 11.3 வீதமாக தற்போதைய தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. அந்த அடிப்படையில் இதுவரையில் நாங்கள் பல்வேறு நிதி மூலங்களின் மூலம் வாழ்வாதார உதவித்திட்டங்கள் மூலம் வங்கிய போதும், தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் மூலம் 95 மில்லியன் ரூபாவை இவ்வாறான வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கியுள்ளது.


மேலும் தேசிய ஒருமைப்பாட்டுக்கான அலுவலகத்தின் ஊடாக 100 மில்லின் ரூபா பெறுமதியான நிதியின் மூலம் வாழ்வாதர உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தது. எனவே 200 மில்லியன் பெறுமதியான வேலைத்திட்டங்கள் வாழ்வாதார வேலைத்திட்டங்கள் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றன.


எனவே இத்திட்டங்களின் ஊடாக இப் பிரதேசத்தினுடைய வறுமையை தணித்து மக்களுடைய வாழ்வாதரத்தினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எங்களுடைய களநிலை உத்தியோகத்தர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.


தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தங்களது அமைச்சின் ஊடாக இவ்வருடத்தில் 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள வாழ்வாதார உபகரணங்கள் வழங்கல், வீதிப்புனரமைப்பு, மற்றும் குளங்களின் புனரமைப்பு உள்ளிட்ட திட்டங்களையும் இதன்போது பார்வையிட்டனர்.

 

இந்த நிகழ்வில மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, மாவட்ட செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ். முரளிதரன், மண்முனை தென் மேற்கு பிரதேச உதவித்திட்டமிடல் பணிப்பாளர்களான எம்.குணரெட்ணம், கே.பிரபாகரன், தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Ninaivil

திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
யாழ். காரைநகர்
சுண்டுக்குளி, கனடா
19 யூலை 2018
Pub.Date: July 21, 2018
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018