படப்பிடிப்புக்கு தயாராகும் விஜய், அஜித்குமார், விக்ரம் நடிக்கும் புதிய படங்கள்

விஜய், அஜித்குமார், விக்ரம் ஆகியோர் புதிய படங்களில் நடிக்க தயாராகி உள்ளனர். இதர நடிகர்-நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. இவற்றின் படப்பிடிப்புகளை விரைவில் தொடங்க திட்டமிட்டு உள்ளனர். விஜய் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்கிறார்.


ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் துப்பாக்கி, கத்தி படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. தற்போது மூன்றாவது முறையாக இணைகிறார்கள். இது விஜய்க்கு 62-வது படமாகும். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. கதாநாயகியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலமான ரகுல் பிரீத் சிங்கை பரிசீலித்தனர்.


சோனாக்சி சின்கா பெயரும் அடிபட்டது. தற்போது கீர்த்தி சுரேசிடம் பேசி வருகிறார்கள். பைரவா படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார். துப்பாக்கி போன்று அதிரடி கதையம்சத்தில் தயாராகிறது.


அஜித்குமார்


அஜித்குமார் நடிக்கும் புதிய படத்தை சிவா டைரக்டு செய்கிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்கள் வந்தன. இப்போது 4-வது முறையாகவும் இணைந்துள்ளனர். முந்தைய விவேகம் படத்துக்கு இரண்டு விதமான விமர்சனங்கள் இருந்தன. எனவே சிவா இயக்கத்தில் மீண்டும் நடிக்க மாட்டார் என்று பேசப்பட்டது.


முன்னணி இயக்குனர்கள் பலர் அஜித் படத்தை இயக்க கதைகளுடன் தயாராக இருந்தனர். ஆனாலும் மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்க அஜித்குமார் முன்வந்துள்ளார். இந்த படத்துக்கு விஸ்வாசம் என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இதில் வழக்கமான சால்ட் அன்ட் பெப்பர் தோற்றத்தில் இல்லாமல் கருப்பு நிறை தலைமுடியில் இளமையாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கதாநாயகியாக நடிக்க அனுஷ்கா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரிடம் பேசி வருகிறார்கள்.


விக்ரம்


விக்ரம் ‘ஸ்கெட்ச்’ என்ற படத்தை முடித்து விட்டு சாமி-2 படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். ஸ்கெட்ச் படம் ஜனவரி மாதம் திரைக்கு வருகிறது. சாமி-2 படத்தை ஹரி இயக்குகிறார். 2003-ம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய சாமி படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகிறது. இந்த படத்தில் திரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஆனால் திரிஷா கதை பிடிக்கவில்லை என்று ஒதுங்கி விட்டார். அவரிடம் சமரச பேச்சு நடத்தி மீண்டும் நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது. அவர் மறுத்தால் வேறு கதாநாயகியை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளனர். 

Ninaivil

திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
யாழ். காரைநகர்
சுண்டுக்குளி, கனடா
19 யூலை 2018
Pub.Date: July 21, 2018
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018