கிழக்கு மாகாண வைத்தியசாலை அபிவிருத்தியில் எந்தவித பாராபட்சமும் இல்லை – சுகாதார அமைச்சர்

கிழக்கு மாகாண வைத்தியசாலை அபிவிருத்தியில் எந்தவித பாராபட்சத்திற்கும் சுகாதார அமைச்சு இடமளிக்கவில்லை என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே சுகாதார அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.


அமைச்சர் தொடந்து உரையாற்றுகையில் ,


மாகாணசபையின் கோரிக்கைக்கு அமைவாகவே நிதி ஒதுக்கீடு

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் அவர்கள் சுட்டிக்காட்டிய கிழக்கு மாகாண அம்பாறை மாவட்ட வைத்தியசாலைகள் அனைத்தும் மாகாண சபைக்கு உட்பட்டதாகும். இதற்கான நிதி ஒதுக்கீடு குறித்த விடயங்களை என்னால் குறிப்பிடமுடியாது. மாகாண சபையின் கோரிக்கைக்கு அமைவாகவே நாம் நிதியை வழங்குகின்றோம்.


நான் சுகாதார அமைச்சராக பதவியேற்ற பின்னர் மேல்மாகாணத்திற்கு அடுத்தபடியாக வடமாகாணத்திற்கு பெருமளவிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளேன் . இதேபோன்று தான் கிழக்கு மாகாணத்திற்கும் நான் நிதிஒதுக்கீட்டினை மேற்கொண்டுள்ளேன். எனது இந்த நடவடிக்கையை வடமாகாண முன்னாள அமைச்சர் சத்தியலிங்கம் பாராட்டியதையும் இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

 

பாராபட்சம் காட்டி இனவாதத்தை முன்னெடுக்கவேண்டாம்

 

சுகாதாரத்துறை பிரதி அமைச்சர் பைசல் காசிம்

திருக்கோயில் வைத்தியசாலை நிர்மாணப்பணிகளுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாராபட்சம் காட்டி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. தயவுசெய்து பாராபட்சம் காட்டி இனவாதத்தை முன்வைக்கவேண்டாம்.

 


மாகாணசபைக்குட்பட்ட வைத்தியசாலைகளில் மாகாணசபை கவனத்தில் கொள்ளவில்லை

தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம்


கண்டி மாவட்ட மக்களுக்கு மாத்திரமன்றி நாட்டின் பல மாகாணங்களைச் சேர்ந்த மக்களுக்கும் கண்டி வைத்தியசாலை ஊடாக பாரிய சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும். இங்கு பல குறைபாடுகளும் காணப்படுகின்றன.


கண்டி மாவட்டத்தின் பிராந்திய வைத்தியசாலைகளில் தரமுயர்த்தும்பொழுது இந்த மாவட்டத்திலுள்ள சனத்தொகைக்கு ஏற்ப நடவடிக்கையும் இடம்பெறும். பிராந்திய வைத்தியசாலைகளில் ஒன்றாக அங்குரணை சியா வைத்தியசாலையை குறிப்பிடமுடியும் . ஆனால் இங்கு பல குறைபாடுகள் காணப்படுகின்றன.

மாகாணசபைக்குட்பட்ட இந்த வைத்தியாசாலை தொடர்பாக மாகாணசபையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட போதிலும் மாகாணசபை கவனத்தில் கொள்ளவில்லை .

 


நாட்குறிப்பு அச்சிடுவதற்கு 150 மில்லியன் மோசடி

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச 


தேசப்பற்றுள்ளவர்கள் என்று கூறுபவர்கள் கடந்த ஆட்சிக்காலத்தில் அப்பாவி மக்களுக்காக கட்டப்பட்ட வீடுகளை தமது உறவினர்களுக்கான வழங்கினார்கள். கடந்த அரசாங்கத்தில் வீடமைப்பு அமைச்சு வீண் செலவுகளை மேற்கொண்டது. நாட்குறிப்பு அச்சிடுவதற்காக 150 மில்லியன் ரூபாவை மோசடி செய்துள்ளது. முன்னாள் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச எனது இந்த கேள்விகளுக்கு பதில் கூறுவாரா?

 

திருக்கோயில் பிரதேச வைத்தியசாலை 120 வருடங்கள் பழமைவாய்ந்தது

 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்

கிழக்கு மாகாணத்தில் வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யவேண்டும். குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் காணப்படும் ஆதார வைத்தியசாலைகள் மக்களின் தேவைக்கேற்ற வகையில் சேவைகளை முன்னெடுப்பதில் சிரமங்கள் உண்டு.


இந்த மாவட்டத்தில் திருக்கோயில் பிரதேசத்திற்கான வைத்தியசாலை 120 வருடங்கள் பழமை வாய்ந்ததாகும்.அதனை மீள நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்கான பணிகள் இன்னும் முறையாக இடம்பெறவில்லை.
வெளிமாவட்ட ஊடகவியலாளர்களுக்கு வீட்டுவசதிகள்

பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்


வெளிமாவட்டங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் கொழும்பிலிருந்து வந்து பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு வீட்டுவசதி செய்துகொடுக்கப்படவேண்டும். ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் மன்னாரில் வாழ்கின்றனர். இவர்களுக்கு போதிய வைத்தியசாலை வசதிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்கத்தில் ஒசுசல நிறுவனத்தின் சேவைகளை விஸ்தரிக்கவேண்டும்

பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம்


ஒரு பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு ஒசுசல நிறுவனமே அமைக்கப்படவேண்டும். திருகோணமலை மாவட்டத்தில் ஆஸ்பத்திரி தேவைகள் படிப்படியாக பூர்த்திசெய்யப்பட்டு வருகின்றது. இது மகிழ்ச்சிக்குரியதாகும். இங்கு நிலவும் வெற்றிடங்களை இதேபோன்று விரைவாக பூர்த்திசெய்யவேண்டும்.

 


தீவுப்பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் நிலவும் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்யவேண்டும்

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீரதரன்


கிளிநொச்சி மாவட்டத்திலேயே மிக மோசமான மந்த போசாக்கு நிலை காணப்படுகின்றது.


யாழ்மாவட்டத்திலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் உள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் உள்ளிட்ட ஆளனிப்பற்றாக்குறை நிலவுகின்றது. நெடுந்தீவில் வைத்தியசேவைகள் முறையாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும் . இங்கு வைத்தியர்கள் தங்குவதற்கு உத்தியோகபூர்வ விடுதிகள் இல்லை. நெடுந்தீவு, நைனாதீவு, அணலைதீவு வைத்தியசாலைகளில் நிலவும் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்யவேண்டும்.

 

வன்னி மாவட்டத்தில் 50ஆயிரம்பேருக்கு வீடுகள் தேவை

பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்

மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளில் நிலவும் வைத்தியர்களின் பற்றாக்குறை மற்றும் ஆளனிப்பற்றாக்குறைகளை உடனடியாக பூர்த்திசெய்யவேண்டும்.


வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பும் பொழுது அங்குள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்கள் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தல் வேண்டும். முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச வழியில் அவரது புதல்வர் வீடமைப்பு துறையில் முன்னெடுத்துவரும் சேவைகள் பாராட்டத்தக்கது. வன்னி மாவட்டத்தில் 50ஆயிரம்பேருக்கு வீடுகள் தேவை இந்த விடயத்தில் அமைச்சர் கவனம் செலுத்தவேண்டும்.

 

Ninaivil

திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
யாழ்ப்பாணம்
கனடா
7 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 9, 2018