மனோ கணேசனின் கூட்டணி கொழும்பில் இன்று கூடுகிறது

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ் முற்போக்கு கூட்டணி கொழும்பில் கூடவுள்ளது.


இந்த கூட்டம் கூட்டணியின் தலைவரும், தேசிய நல்லிணக்க அமைச்சருமான மனோ கணேசன் தலைமையில் கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.


இதில் கூட்டணியின் இணைத் தலைவர்களான அமைச்சர் திகாம்பரம், கல்வி இராஜாங்க அமைச்சர் இராதா கிருஷ்ணன், பொதுச் செயலாளர் லோரன்ஸ் உள்ளிட்ட கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர்.


உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஒருசில தொகுதிகளில் தனித்தும், ஏனைய சில தொகுதிகளில் கூட்டணி அமைத்தும் களமிறங்கவுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி, அதுகுறித்து இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை.


எனவே இன்றைய தினம் நடைபெறவுள்ள சந்திப்பின்போது இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


நுவரெலியா மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளமை உறுதியாகியிருக்கின்ற போதிலும், ஏனைய மாவட்டங்களிலேயே ஆசனப் பங்கீட்டில் சர்ச்சை நீடிக்கின்றது.

Ninaivil

திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
யாழ்ப்பாணம்.
லண்டன்
8 மார்ச் 2018
Pub.Date: March 13, 2018
திருமதி கலைவாணி பாலச்சந்திரன்
திருமதி கலைவாணி பாலச்சந்திரன்
யாழ். வண்ணார்பண்ணை
ஜெர்மனி
6 மார்ச் 2018
Pub.Date: March 9, 2018