தமிழக கரையோரத்தை நோக்கி நகரும் தாழமுக்க தாழ்வு நிலை - இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம்

தற்பொழுது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு வங்காளவிரிகுடாவில் விசேடமாக நாட்டின் கிழக்கு பிரதேசத்தில் 1100 கிலோமீற்றர் அப்பாலுள்ள தாழமுக்க தாழ்வு நிலை எதிர்வரும் 24 மணியாலங்களுள் மேலும் வலுவடையும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த தாழமுக்க நிலை தமிழ் நாட்டை நோக்கி நகர்வதாகவே தெரிகின்றது. இந்த நகர்வின் அடிப்படையில் இது தமிழ் நாட்டின் கரையோர பிரதேசத்தை கடக்கும் என்று தெரிவதாகவும் இதனால் இலங்கைக்கு எந்தவித தாக்கமும் ஏற்படாது என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.


இருப்பினும் இதன் இடைக்காலத்தாக்கம் நாட்டின் வடக்கு , வட மத்திய , கிழக்கு பகுதிகளில் விசேடமாக காலை வேளைகளில் மழையுடன் கூடிய காலநிலை காணப்படும். காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றரை கொண்டதாக இருக்கும்.


விசேடமாக கடல் நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்கள் குறிப்பாக வங்காளவிரிகுடாவின் கடல் பகுதியில் கடல் நடவடிக்கையை தவிர்த்து கொள்வது சிறந்ததாகும். காரணம் தற்போதைய தாழமுக்க தாழ்வு நிலை காரணமாக கடல்கொந்தளிப்பு காணப்படுகின்றது.


காற்றின் வேகமும் 100 முதல் 120 வரை கொண்டதாக இருக்கும் கடல் பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். விசேடமாக வடக்கு கிழக்கு கடல் பிரதேசத்தில் கடல் மற்றும் ஆழமான கடல் பகுதியில் கடல் நடவடிக்கையை தவிர்த்து கொள்ளவது சிறந்தது என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

Ninaivil

திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
யாழ்ப்பாணம்
கனடா
7 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 9, 2018