ஊடகங்கள் விரிக்கும் வலையில் சிக்கமாட்டேன்;பைசர் முஸ்தபா சூளுரை

ஸ்ரீலங்காவிலுள்ள ஊடகங்கள் தங்களது பொறுப்புக்களையும், கடமைகளையும் சரிவர நிறைவேற்ற வேண்டும் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபா வலியுறுத்தியுள்ளார்.


ஸ்ரீலங்காவிலுள்ள ஊடகங்கள் மீது கடுமையான விமர்சனத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் முன்வைத்திருந்த நிலையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சராக பைசர் முஸ்தபா இந்த விடயத்தை தெரிவித்தார்.


மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்றது.


எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் அடுத்த வருடம் பெப்ரவரி 17ஆம் திகதிக்கு முன்னதாக நடத்தமுடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த  தேசப்பிரிய  தெரிவித்திருந்த நிலையில் தேர்தல் திகதி தொடர்பாக அமைச்சர் சைபர் முஸ்தபாவிடம் ஊடகவியலாளர்கள் இதன்போது வினவினர்.


மேலும் உள்ளூராட்சிமன்ற அமைச்சில் மோசடி இடம்பெற்றுள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல்கள் குறித்தும் இதன்போது கேள்விகள் முன்வைக்கப்பட்டன.


இதற்கு பதிலளித்த அமைச்சர், “எனது அமைச்சில் மோசடி இடம்பெறுவதற்கு நான் இடமளிக்கவில்லை. ஆனால் குற்றச்சாட்டுக்களை விரல்நீட்டி தெரிவிப்பது இலகுவாக விடயம். ஊடகங்களிலும்கூட உள்ளூராட்சி சபைகளில் மோசடி இடம்பெற்றதாக எந்த சந்தர்ப்பத்திலும் கூறப்படவில்லை. கடந்த இரண்டு வருடங்களில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் வருமானம் அதிகரித்திருக்கின்றது. 90 வீதமான உள்ளூராட் சபைகளில் விரயம் குறைந்து வருமானம் உயர்ந்துள்ளது. இவை எல்லாவற்றிற்கும் ஆவணங்கள் உள்ளன. ஊடகவியலாளராக குறைகூற உரிமையுள்ள போதிலும் எமக்கு பதிலளிக்கின்ற கடமையுள்ளதால் ஆவணங்கள் கூட எம்மிடம் இருக்கின்றன.


தேர்தல் பற்றிய சுப தினமொன்றை கூறுவதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளது. ஆனால் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் வெளியிட்ட கருத்தைக் கொண்டு என்னிடம் பதில் கருத்தைப் பெற்று ஊடகங்கள் அதனை மோதவைப்பதற்கு முயற்சிக்கின்ற போதிலும் அந்த வலையில் நான் சிக்கமாட்டேன். ஊடகங்கள் சுவையான கதைகளை வெளியிட்டாலும், நாட்டு மக்கள் அபிவிருத்தியின் பலனை அனுபவிக்கின்ற நிலையிலும், ஊடகங்கள் என்னிடம் தேர்தலைப் பற்றியே தவிர, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் வேலைத்திட்டங்கள் பற்றி வினவுவதில்லை.எனவே ஊடகங்கள் ஊடகங்களின் வேலைகளை சரிவர செய்ய வேண்டும். நாங்கள் எமது வேலையை நேர்த்தியாக செய்வோம்” என்றார்.

Ninaivil

திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம்
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம்
யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு
யாழ். கரவெட்டி துன்னாலை மேற்கு
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு பரமலிங்கம் சுப்பிரமணியம்
திரு பரமலிங்கம் சுப்பிரமணியம்
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018