சில ஊடகங்கள் நாட்டை மீண்டும் ராஜபக்ஷ யுகத்திற்கு முன்னெடுத்து செல்ல முயற்சி

ஜனநாயகத்தை சீர்குலைப்பதற்கும் நாட்டை மீண்டும் ராஜபக்ஷ யுகத்திற்கு முன்னெடுத்து முறைகேடான கொடுக்கல் வாங்கல்களின் மூலம் பணத்தை சம்பாதிப்பதற்கு சில தனியார் ஊடகங்கள் செயற்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு தாஜ்ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் வன்முறைகளுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு பிரதமர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.


பிரதமர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,


சில தனியார் ஊடக நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் அமைதியாக இருக்கும் பொழுது அரச நிர்வாகம் மற்றும் சமூக சிவில் அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் ஊடக சுதந்திரம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.


ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக ஒன்றுதிரள்வதற்கு எமது ஊடக முக்கியஸ்தர்களுக்கு ஆர்வமில்லை என்றும் பிரதமர் கூறினார்.


ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் ஊடகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியஸ்தர்கள் சமூகமளிக்கவில்லை கடந்த அரசாங்க காலப்பகுதியில் ஊடகங்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக ஒன்று திரள்வதற்கு இவர்கள் மத்தியில் ஆர்வம் இல்லாமல் இருந்தமையே ஆகும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.


ஊடகங்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் ஆர்வம் காட்டாமை இவ்வாறானோருக்கு ஊடக சுதந்திரம் தேவையில்லை என்பதினாலேயா? சமகால நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்த்து ராஜபக்ஷ றெஜிமென்றை மீண்டும் நிலைநிறுத்தி ஊடகங்களை இல்லாதொழிப்பதற்கு இடமளிப்பதற்கா என்றும் பிரதமர் கேள்வி எழுப்பினார்.


ஊடகவியலாளர்கள்; மீதான தாக்குதலில் குற்றமிழைத்தோர் தண்டனைக்கு பயமின்றி சுதந்திரமாக நடமாடும் கலாசாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு ஊடகவியளாலர்களே போர்க்கொடி தூக்க வேண்டும்.


ஆயினும் இந்த கருத்தரங்கில் அரசியல்வாதிகளும் சிவில் சமூகத்தினருமே வருகைதந்துள்ளனர். ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு விடயத்தில் அவர்கள் ஆர்வம் காட்டாமல் உள்ளமை கவலை தருகின்றது. ஜனநாயகத்தை நசுக்க முனைவோருக்கு எதிராக முதலில் குரலெழுப்ப வேண்டியவர்கள் ஊடகவியலாளர்களே.

 

எமது சமூகத்த்pல் ஏற்பட்டுள்ள இத்தகைய கொடுமைகளுக்கு எதிராக எமது ஊடகங்களால் காத்திரமான முறையில் குரலெழுப்ப முடியும்? ஊடகவியலாளர்களின்  உரிமைகளை பாதுகாக்க யுனெஸ்கோ அமைப்பு வகுத்துள்ள செயற்திட்டத்தை வரவேற்ற பிரதமர் இலங்கையில் அவர்களின் திட்டங்கள் தடையின்றி நடைமுறைப்படுத்தப்படும் எனவும் உறுதியளித்தார்.

 

இலங்கையில் 2005 – 2015 காலப்பகுதியில் ஒன்பது ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாகவும் பலர் தாக்குதலுக்கு உள்ளாகியதாகவும் யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் இதன்போது தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
திருமதி யுஸ்ரினா ஜொய்சி சூசைப்பிள்ளை (முத்துராணி)
யாழ்ப்பாணம்.
பிரான்ஸ்
16 டிசெம்பர் 2017
Pub.Date: December 17, 2017
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017