அயோத்தி வழக்கை 2019 தேர்தலுக்கு பின்னர் விசாரிக்க கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992–ம் ஆண்டு இடிக்கப்பட்டது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி - பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாக உள்ளது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு யோசனை தெரிவித்தது. 


உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதியின் உரிமை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், இந்த பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது, ஆனால் அதில் நேர்மறையான நகர்வு காணப்படவில்லை. இவ்விவகாரத்தில் அயோத்திக்கு பதிலாக லக்னோவில் மசூதி கட்ட ஷியா பிரிவினர் தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அயோத்தி வழக்கு தொடர்பான இறுதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடக்கிறது.


இந்நிலையில் அயோத்தி வழக்கை 2019 பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் விசாரிக்க வேண்டும் என சன்னி வக்பு வாரியம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துவிட்டது. வக்பு வாரியம் மற்றும் பாபர் மசூதி நடவடிக்கை கமிட்டி, அயோத்தி வழக்கு தொடர்பாக விசாரணை இன்று முன்னெடுக்கப்பட்டால் நாங்கள் விசாரணையை புறக்கணிப்போம் என கூறிஉள்ளன. இவ்விவகாரம் தொடர்பாக 5 அல்லது 7 நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டின் அரசியலமைப்பு பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018