விஷாலுக்கு வாழ்த்து சொன்ன குஷ்பு மீது காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்

விஷாலுக்கு வாழ்த்து சொன்ன குஷ்பு மீது காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார். 

தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

காங்கிரஸ் கட்சியில் பதவி பெற்றுக் கொண்டு பலதரப்பட்ட பணிகளில் கவனம் செலுத்தி கொண்டிருக்கும் குஷ்பு தொடர்ந்து கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். ஆர்.ேக.நகர் இடைத்தேர்தலில் ேசானியா காந்தி, ராகுல்காந்தி அனுமதி பெற்று திமுக வேட்பாளர் மருதுகணேஷூக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்துள்ளது.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி தீவிர பிரசாரத்தை மேற்கொண்டிருக்கும் வேட்பாளர் மருதுகணேஷ், முதல் ரவுண்டிலேயே வெற்றி வீரராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் நடிகர் விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்து மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார் குஷ்பு. ‘விஷால் மட்டுமல்ல யார் போட்டியிட்டாலும் மண்ணை கவ்வுவார்கள். திமுக வேட்பாளர் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது’ என்று அறிவிக்க வேண்டிய பொறுப்பிலிருக்கும் குஷ்பு, விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இப்போது வாழ்த்துவது வேறு, ஆதரவு வேறு என்கிறார். அவர் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற போது வாழ்த்து சொல்வது வேறு. இப்போது கூட்டணி கட்சி தேர்தல் களத்தில் இருக்கும் போது இப்படி வாழ்த்து சொல்வது திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்தும் செயல். எனவே குஷ்பு மீது கட்சி தலைமை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018