ஆர்கே நகர் மனுக்கள் பரிசீலனையில் பரபரப்பு 72 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த 131 பேரில் 73 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. நடிகர் விஷாலின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு மீண்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், விஷால் மனு பரிசீலனையில் இருப்பதாக இரவு 10 மணிக்கு அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரத்தில், தீபா, எம்ஜிஆரின் அண்ணன் மகன் மனுக்கள் உட்பட 72 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

சென்னை ஆர்.கே.நகர் இடைதேர்தல் வருகிற 21ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 27ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 1ம் தேதி திமுக வேட்பாளர் மருதுகணேஷ், அதிமுக வேட்பாளர் மதுசூதனன், டிடிவி தினகரன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். டிசம்பர் 2ம் தேதி (மிலாடி நபி) மற்றும் 3ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை என்பதால் வேட்பு மனுத்தாக்கல் நடக்கவில்லை.

இந்நிலையில், கடைசி நாளான நேற்று முன்தினம் வேட்பு மனுத்தாக்கல் செய்ய கூட்டம் அலைமோதியது. கடைசி நாளில் பாஜ வேட்பாளர் கரு.நாகராஜன், சுயேச்சை வேட்பாளர்களாக நடிகர் விஷால், ஜெ.தீபா உள்பட 101 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

மொத்தம், 131 பேர் 145 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்தநிலையில்,  வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது. இதற்காக, காலை 10 மணி முதலே தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் உள்ள அலுவலக அறையில்  வேட்பாளர்கள் காத்திருந்தனர். காலை 11 மணிக்கு வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது.

திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வேட்பு மனு ஏற்கப்பட்டது. அதை தொடர்ந்து, சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் மனு ஏற்கப்பட்டது. பின்னர், அதிமுக வேட்பாளர் மதுசூதனின் மனு பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. அப்ேபாது, டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் மற்றும் அவருடன் வந்த வழக்கறிஞர்கள், “மதுசூதனன் விண்ணப்பத்தில்

முறையாக தகவல் அளிக்கவில்லை. எனவே, அவரது மனுவை நிராகரிக்க வேண்டும்” என்று தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வலியுறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுசூதனின் ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது.

 இதையடுத்து, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர், மதுசூதனனின் மனுவை பரிசீலித்து ஏற்று கொண்டார்.

இதை தொடர்ந்து, பாஜ வேட்பாளர் கரு.நாகராஜன், பகுஜன் சமாஜ் வேட்பாளர் வழக்கறிஞர் சத்தியமூர்த்தியின் மனுக்கள் பரிசீலனை செய்து ஏற்கப்பட்டது. இதை தொடர்ந்து, சுயேட்சை வேட்பாளர் ராமதாஸின் மனு பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ராமதாஸ் குறிப்பிட்ட வாக்காளர் அடையாள அட்டை எண்ணில் அவருடைய பெயர் இல்லை என்று கூறி வேட்பு மனுவை நிராகரித்தார்.

இதையடுத்து, ராமதாஸ் தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுச்சாமியை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  அவருக்கு ஆதரவாக அனைத்து சுயேட்சை வேட்பாளர்களும் கூச்சலிட்டனர். இதனால், குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த போலீசார், வேட்பாளர் ராமதாசை அப்புறப்படுத்தினர். இதேபோல், அடுத்தடுத்து சுயேட்சை வேட்பாளர்கள் மீதான வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது. 

இதையடுத்து, பல்வேறு சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.மாலை 5 மணிக்கு நடிகர் விஷாலின் மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது, விஷாலின் மனுவில் முன்மொழிந்தவர்களின் கையெழுத்து போலியாக போடப்பட்டது என்று சில வேட்பாளர்கள் அதிகாரிகளிடம் முறையிட்டனர். 

அப்போது முன்மொழிந்து கையெழுத்துப் போட்ட தீபன், சுமதி, கார்த்திகேயன் ஆகியோர் தாங்கள் கையெழுத்துப் போடவில்லை என்று எழுத்து மூலம் தாக்கல் செய்தனர். இதை வைத்து, 3 பேரின் கையெழுத்து போலியாக இருப்பதாக கூறி அவருடைய மனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விஷாலின் முகவர்கள் தொடர்ந்து முறையிட்டனர். 3 பேர் கையெழுத்து போலியானவை என்று தேர்தல் அதிகாரி விளக்கமளித்தார்.

பின்னர் 6 மணிக்கு விஷால் அங்கு வந்தார் சாலை மறியலில் ஈடுபட்டார். போலீசார் அவரை அழைத்து சமாதானம் பேசினர். பின்னர் தனி அறைக்கு அழைத்துச் சென்று மீண்டும் உங்கள் மனு பரிசீலனை செய்யப்படும் காத்திருங்கள் என்று தெரிவித்தனர். அப்போது கையெழுத்துப் போடவில்லை என்று கூறிய 3 பேரிடமும் விஷால் பேசினார். அதில் சுமதியின் கணவர் வேலுவிடம் பேசினார். அந்த ஆடியோவில் தாங்கள் மிரட்டப்பட்டதை வேலு தெரிவித்தார்.

இந்த ஆடியோவை விஷால் வெளியிட்டார். இது வைரலாக பரவியது. அதைத் தொடர்ந்து 8 மணிக்கு விஷாலின் மனு பரிசீலிக்கப்பட்டது. அப்போது அதிகாரிகளுடன் விஷால் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மிரட்டப்பட்டதாக கூறப்பட்ட ஆடியோவையும் அவர் அதிகாரிகளிடம் போட்டுக் காட்டினார். 

இரவு 8.30 மணியளவில் விஷால் மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.  இதையடுத்துவிஷால் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்நிலையில் விஷால் மனு ஏற்கப்பட வில்லை, இன்னும் பரிசீல னையில் இருப் பதாக நேற்றிரவு 10 மணியளவில் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்த னர். இதனால் நள்ளிரவு வரை குழப்பம் நீடித்தது.

ஜெ.தீபாவின் மனுவில் படிவம் 26ஐ பூர்த்தி செய்யவில்லை என்று கூறி நிராகரிக்கப்பட்டது. எம்ஜிஆரின் அண்ணன் மகன் சந்திரனின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. மொத்தம் 72 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

தொடர்ந்து, வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இரவு 10 மணி வரை நீடித்தது. 145 வேட்பு மனுக்களில் 73 பேரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற டிசம்பர் 7ம் தேதி மாலை 3 மணி (நாளை) கடைசி நாளாகும். போட்டியிட விரும்பாதவர்கள் அன்றைய தினத்திற்குள் வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம். இதைத் தொடர்ந்து நாளை மாலை வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

எம்ஜிஆர் அண்ணன் மகன் மனு நிராகரிப்பு ஏன்?

எம்ஜிஆர் அண்ணன் மகன் எம்ஜி சந்திரன் ஆர்.கே.நகரில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனால், படிவம் 26ல் கையொப்பம் இடவில்லை. சரியாக பூர்த்தி செய்யவில்லை என்று கூறி அதிகாரிகள் மனுவை நிராகரித்தனர். பின்னர், எம்.ஜி.சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், “ஏற்கனவே, முடிவு செய்யப்பட்டு தான் என்னுடைய மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.  இந்த தேர்தலில் கண்டிப்பாக பிரசாரத்தை மேற்கொள்வேன். எனக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட உள்ளேன்”. என்றார்.

சட்டப்புத்தகத்துடன்  உலா வந்த வெற்றிவேல்

வேட்பு மனு தாக்கலின் போது, தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வக்கீல்களுடன் அமர்ந்திருந்தார். அவ்வப்போது வேட்பு மனுவில் தவறு இருந்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கையில் இருந்த சட்டப்புத்தகத்தை புரட்டி வழக்கறிஞர்களுடன் விவாதித்தப்படி இருந்தார்.

அதிகாரிகள் மீது புகார்

வேட்பாளர் ராமதாஸ் மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, புகார் கடிதம் எழுதி வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சஷாங் சாயிடம் ராமதாஸ் அளித்தார். அதில், தன்னுடைய விண்ணப்பம் வேண்டும் என்றே நிராகரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Ninaivil

திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
யாழ்ப்பாணம்
கனடா
7 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 9, 2018