வன்முறைகளற்ற சுதந்திர அமைதியான தேர்தலை நடாத்துவதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - ஜனாதிபதி

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் நிறைவேற்றுச் சபை நேற்று பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் கூடியது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட பொதுஜன ஐக்கிய முன்னணி, ஸ்ரீ லங்கா மக்கள் கட்சி, தேச விடுதலை மக்கள் கட்சி, தேசிய காங்கிரஸ், ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் இதன்போது ஒன்றுகூடினர்.
 
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கு தனித்தனியாக எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்குமாறு பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இதன்போது தெரிவித்தார்.
 
வன்முறைகளற்ற சுதந்திரமானதும் அமைதியானதுமான தேர்தலை நடாத்துவதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியை பிரதிநிதித்துவம் செய்யும் சகல கட்சிகளும் விரிவானதொரு கூட்டணியாக செயற்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் பொது செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.
 
இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமான் மற்றும் தேசிய காங்கிரஸை பிரதிநிதித்துவம் செய்யும் ஏ.எல்.எம். அதாவுல்லா ஆகியோர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட இணக்கம் தெரிவித்தனர்.
 
இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன , ஏனையோரின் தன்மானத்திற்கு பங்கம் விளைவிக்காது வன்முறைகளற்ற, சுதந்திரமானதும் அமைதியானதுமான தேர்தலை உறுதி செய்வதற்கு சகலரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென வலியுறுத்தினார்.
 
மேலும் இத்தேர்தல் வெற்றியானது தேர்தல் அபேட்சகர்களின் மீதே தங்கியுள்ளது என்பதனால் கூட்டணியின் சகல கட்சிகளும் நேர்மையான அரசியல் கொள்கைகளை உடைய அபேட்சகர்களை தமது கட்சி சார்பாக தேர்தலில் முன்னிறுத்த வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.

Ninaivil

திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
யாழ். உரும்பிராய்
லண்டன்
20 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 22, 2018
திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018