தகாத வார்த்தையில் பேசியதாக வழக்கு: விஜயகாந்துக்கு பிடிவாரண்டு

சென்னை விமான நிலையத்தில் தகாத வார்த்தைகளில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், விஜயகாந்துக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ஆலந்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கடந்த 2012-ம் ஆண்டு பாலு என்பவரை தகாத வார்த்தைகளில் திட்டி தாக்கியதாக தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த், முன்னாள் எம்.எல்.ஏ. அனகை முருகேசன் ஆகியோர் மீது புகார் எழுந்தது.

இதுதொடர்பாக பாலு அளித்த புகாரின்பேரில் விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை ஆலந்தூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

கோர்ட்டில் ஆஜராகுமாறு விஜயகாந்த், அனகை முருகேசன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் அந்த வழக்கு தொடர்பான விசாரணை மாஜிஸ்திரேட்டு சுல்தான் ஆரிபீன் முன் கடந்த மாதம் 14-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அனகை முருகேசன் மட்டும் ஆஜரானார். ஆனால் விஜயகாந்த் ஆஜராகவில்லை.

அவருக்கு உடல்நலம் சரியில்லை என மனுதாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட்டு, டிசம்பர் 5-ந் தேதி (நேற்று) விஜயகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் விஜயகாந்த் கோர்ட்டில் ஆஜராகவில்லை. மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு சென்று இருப்பதால் அவர் ஆஜராகவில்லை என்று விஜயகாந்த் தரப்பு வக்கீல்கள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை மாஜிஸ்திரேட்டு ஏற்கவில்லை.

இதையடுத்து விஜயகாந்திற்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட்டு சுல்தான் ஆரிபீன் உத்தரவிட்டார். மேலும் வழக்கை அடுத்த ஆண்டு (2018) பிப்ரவரி மாதம் 13-ந் தேதிக்கு தள்ளிவைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.


Ninaivil

திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
யாழ். காரைநகர்
சுண்டுக்குளி, கனடா
19 யூலை 2018
Pub.Date: July 21, 2018
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018