அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்றொழில் அமைச்சர் எச்சரிக்கை

இலங்கை கடல்எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படும்.

இவர்களிடமிருந்து தண்டப்பணம் அறவிடடுவது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.


இதேவேளை இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்படும் மீன்பிடிவள்ளங்கள் மீளளிக்கப்படமாட்டாது என்றும் அமைச்சர் எச்சரிக்கை செய்துள்ளார்.


பாராளுமன்றத்தில் நேற்று வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார். கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்றது.இதில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,


சமகால நல்லாட்சி அரசாங்கம் நிர்வாகப்பொறுப்பை ஏற்றுக்கொண்டபின்னர் முன்னெடுத்த சர்வதேச கொள்கையின் காரணமாக ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை மீது வைத்திருந்த மீன்பிடித்தடையை நீக்கியதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


இந்திய மீனவர்களின் அத்துமீறல் பிரச்சனை தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் , இவர்கள் எமது கடற்பரப்பிற்குள் பிரவேசித்து எமது நீரியல் வளங்களை அள்ளிச்செல்கின்றனர். இவற்றை சூழலுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இவர்கள் செயற்படுகின்றனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


அத்துமீறும் இந்திய மீனவர்களின் செயற்பாடுகளை தடு;ப்பதற்காக அவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையை நாம் விரிவுபடுத்தியுள்ளோம்.


இவர்களிடமிருந்து கைப்பற்றப்படும் மீன்பிடிவள்ளங்களை விடுவிப்பது இல்லை என்பதில் நாம் உறுதியாகவுள்ளோம். இந்த கடுமையான நடவடிக்கையின் காராணமாக அத்துமீறும் இந்திய மீனவர்களின் வள்ளங்களின் எண்ணிக்கை குறைந்துவருவதையும் சுட்டிக்காட்டினார்.


இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடர்பில் சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கையில் இந்திய மீனவர்கள் ஈடுபடுவதை இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த விடயம் எமக்கு கிடைத்த பெரும்வெற்றியாகும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Ninaivil

திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
யாழ்ப்பாணம்.
லண்டன்
8 மார்ச் 2018
Pub.Date: March 13, 2018
திருமதி கலைவாணி பாலச்சந்திரன்
திருமதி கலைவாணி பாலச்சந்திரன்
யாழ். வண்ணார்பண்ணை
ஜெர்மனி
6 மார்ச் 2018
Pub.Date: March 9, 2018