தாழமுக்கம் வலுவடைகின்றது - வடக்கு கிழக்கு கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும்

மத்திய வங்காள விரிகுடாவில் கடல் பிரதேசத்தில் உருவான தாழமுக்க தாழ்வு நிலை வலுவடைந்து பிராந்தியத்தின் வடமேல் திசையை நோக்கி இலங்கைக்கு அப்பால் நகர்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்பொழுது இந்த தாழமுக்கம் நாட்டில் இருந்து 800 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது. எதிர்வரும் 12 மணித்தியால காலப்பகுதியில் இது வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களின் காற்றின் வேகம் அதிகரிக்ககூடும் . இதனால் எதிர்வரும் 24 மணித்தியால காலப்பகுதியில் கடல் பிரதேசம் சீரற்றதாக காணப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.


வடக்கு , வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் பலபகுதிகளில் ஓரளவு மழை பெய்யும். சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.


மேற்கு , சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி , மாத்தறை அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் 50 கிலோமீற்றருக்கு அதிகமான வேகத்தில் காற்றுவீசக்கூடும்.
பொத்துவிலிருந்து திருகோணமாலையூடாக காங்கேசன்துறை வரையிலான கடற்கரையோர பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.


இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக காற்று வீசக்கூடும். இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

இதேவேளை சீரற்ற காலநிலைக்கு மத்தியில் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவதை தவித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்ட நிலையில் மன்னாரில் கடல் நடவடிக்கையில் ஈடுபட முயற்சித்ததாக சிலருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Ninaivil

திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
யாழ்ப்பாணம்
கனடா
7 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 9, 2018