தமிழரசுக் கட்சி தலைமையிலான கூட்டில் இருந்து வெளியேறியது ரெலோ!

தமிழரசுக் கட்சி தலைமையிலாக கூட்டில் இருந்து தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) வெளியேறுவதாக தெரிவித்துள்ளது.

வவுனியாவில் அமைந்துள்ள ரெலோ அமைப்பின் அலுவலகத்தில் நேற்றிரவு(05) இரவு 9 மணி தொடக்கம் அதிகாலை 1.30 வரை அவ் அமைப்பின் அரசியல் குழுக் கூட்டம் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்திலேயே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் ரெலோ அமைப்பின் அரசியல் குழுத் உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வினோரதராதலிங்கம் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது....

தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இடப்பங்கீடுகள் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் ரெலோ தனது அதிருப்தி நிலையை வெளிப்படுத்தியது.

தமிழரசுக் கட்சியின் செயற்பாடு அதில் இணைந்து நாம் செயற்பட முடியாத சூழலை உருவாக்கியுள்ளது.

அதனால் எதிர்வரும் தேர்தலில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இன்று(06) யாழ்ப்பாணத்தில் நாம் தொடர்ந்து இது தொடர்பில் பேசவுள்ளோம். அதன் பின்னரே எவ்வாறு போட்டியிடுவது என்ற முடிவு எட்டப்படும்.

இன்றைய தினம் தமிழரசுக் கட்சிக்கு எமது முடிவை அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Ninaivil

திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
யாழ். காரைநகர்
சுண்டுக்குளி, கனடா
19 யூலை 2018
Pub.Date: July 21, 2018
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018