புனித சிவனொளிபாதமலை பிரதேசம் இரத்தினபுரி மாவட்டத்திற்கு உட்பட்டது - அமைச்சர் பைசர் முஸ்தபா

புதிய எல்லை நிர்ணயத்திற்கு அமைவாக புனித சிவனொளிபாதமலை பிரதேசம் இரத்தினபுரி மாவட்டத்திற்கு உட்பட்டதென்று மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவித்தார்.

ஊடகவியளாலர்களுடனான சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,


இந்த விடயத்தினால் தேர்தல் தாமதம் அடையாது. எந்தவொரு நபருக்கும் வழக்கு தாக்கல் செய்ய உரிமை உண்டு. நாம் புனித சிவனொளிபாதமலை எல்லையில் எந்தவிதமான மாற்றமும் மேற்கொள்ளவில்லை. நாம் இதனை நீதிமன்றத்தில் தெளிவுப்படுத்தி எமது தரப்பிலான நிலையை உறுதி செய்ய முடியும். இதனால் சிவனொளிப்பாதமலைக்கு எந்தவிதமான பாதிப்போ ஏதேனும் பிரச்சனையோ ஏற்பட இடமளிக்கமாட்டோம்.

 

இதே போன்று மாநாகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க சிவனொளிப்பாதமலை பிரதேசத்தை புனித பிரதேசமாக வர்த்தமானியில் அறிவித்துள்ளார். இதனால் எந்தவொரு பிரச்சனையும் ஏற்படாது. இதனை பொறுப்புடன் கூறுகின்றேன்.  சிலர் சிவனொளிப்பாதமலை பிரதேசத்தில் இரத்தினபுரியில் இருந்து நுவரெலியா மாவட்டத்துடன் சேர்ந்து இருப்பதாக கூறுகின்றனர். இவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடாத்துவதற்கு தமது அமைச்சினால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை முறையாக நிறைவேற்றுமாறும் அமைச்சர் பைசர் முஸ்தப்பா மேலும் கூறினார்.


செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் வெளிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறும், அம்பகமுவ பிரதேசசபைக்கான தேர்தலை இடைநிறுத்த இடைக்கால தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறு அம்பகமுவ பிரதேசசபையின் உறுப்பினர் ஒருவர் மனுவைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
திருமதி வைரவசுந்தரம் செல்லம்மா
யாழ். காரைநகர்
சுண்டுக்குளி, கனடா
19 யூலை 2018
Pub.Date: July 21, 2018
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018