புதிய ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை விநியோகம் !

டிஜிட்டல் தொழிநுட்பத்திலமைந்த தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் பணியில், இதுவரை 75 ஆயிரம் புதிய ஸ்மார்ட் அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. புதிய ஸ்மார்ட்   தேசிய   அடையாள   அட்டை    விநியோகம் !


இந்த அடையாள அட்டையை பெற்று கொள்வது தொடர்பில் மக்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும், நாளாந்தம் சுமார் 1500 பேருக்கு விநியோகிக்கப்படுவதாகவும் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க  தெரிவித்துள்ளார்.


15 வயதை பூர்த்தி செய்தவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை கோருவோருக்கும் தமது தேசிய அடையாள அட்டை சீர்குலைந்து காணாமல் போனோர் உள்ளிட்டோருக்கு இந்த ஸ்மாட் தேசிய அடையாள அட்டையை பெற்று கொள்ளமுடியும் என்பதோடு,  இந்த ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை கடந்த ஓக்டோபர் மாதம் 27 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.


வருகின்ற மாதத்தில்  உள்ளுராட்சி மன்ற தேர்தல் இடம் பெற்றவுள்ளதால், தேசிய அடையாள அட்டையைப் பெற்று கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


புதிய ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டையில் 3 மொழிகளிலும் தகவல் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் இதற்கான விண்ணப்பதாரர்களின் புகைப்படம் உரிய தரம் தொடர்பான பிரிவின் சிபாரிசுக்கு அமைவாகவே  பெற்றுக்கொள்ளப்படுகின்றது.

எதிர்வரும் காலங்களில் தேசிய அடையாள அட்டையில் சம்பந்தப்பட்டவர்களின் கைவிரல் அடையாளம் உள்ளடக்கப்படவுள்ளது.

இதற்கு வசதியாக சட்டத்திலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது என்று ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
திரு நடராசா சிவசுப்பிரமணியம் (சிவம்)
யாழ். தாவடி
ஜெர்மனி, கனடா
12 மார்ச் 2018
Pub.Date: March 15, 2018
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
திரு துரைராஜசிங்கம் இரத்தினம் (New York Mama)
யாழ். மாதகல்
கிளிநொச்சி, ஐக்கிய அமெரிக்கா
7 மார்ச் 2018
Pub.Date: March 14, 2018
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
யாழ்ப்பாணம்.
லண்டன்
8 மார்ச் 2018
Pub.Date: March 13, 2018
திருமதி கலைவாணி பாலச்சந்திரன்
திருமதி கலைவாணி பாலச்சந்திரன்
யாழ். வண்ணார்பண்ணை
ஜெர்மனி
6 மார்ச் 2018
Pub.Date: March 9, 2018