வெற்றி பெறுவது ஆஸ்திரேலியாவா? இங்கிலாந்தா? பரபரப்பான கட்டத்தில் ஆஷஸ் 2-வது டெஸ்ட்

ஆஸ்திரேலியா–இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆ‌ஷஸ் 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டி உள்ளது.


ஆ‌ஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்

ஆஸ்திரேலியா–இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆ‌ஷஸ் தொடரின் 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (பகல்–இரவு) அடிலெய்டில் நடந்து வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 442 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 227 ரன்னில் ஆல்–அவுட் ஆனது.


இங்கிலாந்து அணி பாலோ–ஆன் ஆனாலும், ஆஸ்திரேலிய அணி பாலோ–ஆன் கொடுக்காமல் 2–வது இன்னிங்சை ஆடியது. 215 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 3–வது நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்து இருந்தது. ஹேன்ட்ஸ்கோம்ப் 3 ரன்னுடனும், நாதன் லயன் 3 ரன்னுடனும் களத்தில் நின்றனர்.


138 ரன்னில் சுருண்டது

நேற்று 4–வது நாள் ஆட்டம் நடந்தது. இங்கிலாந்து வீரர்களின் சிறப்பான பந்து வீச்சில் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. ஆஸ்திரேலிய அணி 2–வது இன்னிங்சில் 58 ஓவர்களில் 138 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 20 ரன்னும், மிட்செல் ஸ்டார்க் 20 ரன்னும் எடுத்தனர். கம்மின்ஸ் 11 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.


இங்கிலாந்து அணி தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டும், கிறிஸ்வோக்ஸ் 4 விக்கெட்டும், கிரேக் ஓவர்டான் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். ஆஸ்திரேலிய மண்ணில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியது இதுவே முதல்முறையாகும்.


354 ரன்கள் இலக்கு

பின்னர் 354 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இங்கிலாந்து அணி 2–வது இன்னிங்சை விளையாடியது. இங்கிலாந்து அணியினர் நிதானமான ஆட்டத்தை கடைப்பிடித்தாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. தொடக்க ஆட்டக்காரர் அலஸ்டயர் குக் (16 ரன், 66 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) நாதன் லயன் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். ஸ்டோன்மான் 36 ரன்னிலும் (65 பந்துகளில் 6 பவுண்டரியுடன்), ஜேம்ஸ் வின்ஸ் 15 ரன்னிலும் (39 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன்) மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தனர். டேவிட் மலான் 80 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 29 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்து வீச்சில் போல்டு ஆனார்.


நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் இங்கிலாந்து அணி 2–வது இன்னிங்சில் 62 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஜோரூட் 114 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 67 ரன்னும், கிறிஸ்வோக்ஸ் 8 பந்துகளில் 5 ரன்னும் எடுத்து களத்தில் நின்றனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும், கம்மின்ஸ், நாதன் லயன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.


178 ரன்கள் தேவை

இன்று 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இங்கிலாந்து அணி வெற்றிக்கு மேலும் 178 ரன்கள் தேவைப்படுகிறது. அந்த அணி கைவசம் 6 விக்கெட்டுகள் உள்ளது.

Ninaivil

திரு கபிலன் செல்வராஜா
திரு கபிலன் செல்வராஜா
யாழ். பளை
லண்டன்
20 மார்ச் 2018
Pub.Date: March 22, 2018
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
திருமதி காந்திமதி வடிவேலு (ராணி)
யாழ். தொண்டைமானாறு
சிங்கப்பூர், கனடா
20 பெப்ரவரி 2018
Pub.Date: March 19, 2018
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
திரு தெட்சணாமூர்த்தி நாகமுத்து
யாழ். புங்குடுதீவு
பிரான்ஸ்
16 மார்ச் 2018
Pub.Date: March 17, 2018