த.தே.ம.முன்னணி சைக்கிள் சின்னத்தில் தனித்து போட்டியிடும்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் தனித்து போட்டியிடவுள்ளதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.


உள்ளூராட்சி சபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியும், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியும் இணைந்து தேர்தல் கூட்டு ஒன்றை உருவாக்கியிருந்தது.


எனினும் பின்னர் தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் தமிழர் விடுதலை கூட்டணியையும் இணைத்து போட்டியிட ஈ.பி.ஆர்.எல்.எவ் தீர்மானித்தமையை தொடர்ந்து அந்த கூட்டு உடைந்தது.
இந்நிலையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் பொது அமைப்புக்களையும் இணைத்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக செயலாளர் செ.கஜேந்திரன் கூறியுள்ளார்.


இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்கனவே வெளியேறியுள்ள நிலையில் தற்போது புளொட் மற்றும் ரெலோ அமைப்புக்களும் வெளியேறி புதிதாக கூட்டமைக்கப் போவதாக தெரிய வருகின்றது.


இந்நிலையில் பல கட்சிகளும் சேர்ந்து அமைக்கப்படவுள்ள கூட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணி இணையுமா இல்லையா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிலும் தாம் இணையப் போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.

Ninaivil

திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
திருமதி யோகேஸ்வரி பொன்னம்பலம்
யாழ். கந்தர்மடம்
அவுஸ்திரேலியா
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 13, 2018
திரு குமாரசாமி சித்தார்த்தன்
திரு குமாரசாமி சித்தார்த்தன்
யாழ். திருநெல்வேலி
லண்டன்
9 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 12, 2018
திரு குலேந்திரன் கந்தசாமி
திரு குலேந்திரன் கந்தசாமி
யாழ். உடுப்பிட்டி
கனடா
8 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திருமதி இராமலிங்கம் சாந்தினி
திருமதி இராமலிங்கம் சாந்தினி
யாழ். கைதடி
சுவிஸ்
3 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 10, 2018
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
திரு மரியாம்பிள்ளை தேவதாஸ் பற்றிக்
யாழ்ப்பாணம்
கனடா
7 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 9, 2018