2018ம் ஆண்டு யாழ்மாவட்டத்தில் 18 பிரதேச செயலாளர் பிரிவு மக்களின் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை

2020ஆம் ஆண்டளவில் 332 பிரதேச செயலாளர் மட்டத்தில் கிராம ரீதியில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று உள்நாட்டு அலுவல்கள்அமைச்சர் வஜிர அபயவர்தன தெரிவித்துள்ளார்.

நாம் முன்னெடுக்கும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் இந்த வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம் என்று பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவுசெலவுத்திட்டத்தின் மீதான குழுநிலை விவாதத்தில் உள்நாட்டலுவல்கள் அமைச்சிற்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.


2018ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியிலும் பார்க்க கூடுதலான நிதி தேவைப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் 2853 கோடி ரூபா தேவைப்பட்டது. முழுமையான நிர்வாக பொறிமுறைக்கு உட்பட்ட பிரதேச செயலகங்கள் , மாவட்ட செயலகங்கள் 14ஆயிரத்து22 கிராம உத்தியோகத்தர்கள் 17ஆயிரம் அபிவிருத்தி அதிகாரிகள் , 332 பிரதேச அலுவலகங்கள் என்ற ரீதியில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


அனர்த்த நிலையின்போது அரச பொறிமுறையை பயன்படுத்தவேண்டி ஏற்பட்டது. 5ஆயிரம் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் வறட்சியை எதிர்கொண்டன. சமீபத்தில் மீண்டும் 130 பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் 27 ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டன. 14 பேர் உயிரிழந்தனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அதிகாரிகளை பயன்படுத்தி அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டது.


இவர்களின் அர்ப்பணிப்பின் காரணமாக 2017 ஆம் ஆண்டில் அனைத்து இலக்குகளையும் எட்ட முடிந்தது. 14ஆயிரத்து 22 கிராம உத்தியோகத்தர்கள் அலுவலகங்களை ஒன்றிணைத்து உத்தியோகபூர்வ சேவைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு 150 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2020ஆம் ஆண்டளவில் அனைத்து அலுவலகங்களையும் ஒன்றிணைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


கிராம மட்டத்தில் நிலவும் பாரிய பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ நடவடிக்கை செயற்திட்டமும் இதற்குள் உள்வாங்கப்பட்டது. இதனூடாக கிராமமக்களின் பிரச்சனைகளை முடிந்தளவு தீர்ப்பதே நோக்கமாகும். நாம் காலியில் 18ஆயிரம் பேருக்கு இலவசமாக அடையாள அட்டைகளை பெற்றுக்கொடுத்தோம்.குருநாகல் மாவட்டத்தில் பிரச்சனைகள் தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டோம். இதேபோன்று முல்லைத்தீவு, கிளிநொச்சியிலும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். 2018ஆம் ஆண்டளவில் யாழ்மாவட்டத்தில் 18 பிரதேச செயலாளர் பிரிவை இலக்காக கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


குருநாகல் மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை அற்றவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரமாக காணப்பட்டது. அரசாங்கம் என்ற ரீதியில் இலக்கை எட்டுவதற்காக முன்னோக்கி பயணித்து வருகின்றோம். 10இலட்சம் வேலைத்திட்டத்தில் 14ஆயிரம் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம். அரச ஊழியர் தரப்பில் பாரிய பங்களிப்பு எமக்கு கிடைத்தது. அதேபோன்று எமது தரப்பில் பல முன்னேற்றங்களும் மெற்கொள்ளப்பட்டுள்ளன. ஆரச ஆரம்ப தர ஊழியர்களின் ஊதியம் 14 ஆயிரம் ரூபாவாகும் . இத்தொகை 2020 ஆம் ஆண்டளவில 29ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் . முகாமைத்துவ சேவையில் 15ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படும். அபிவிருத்தி அதிகாரிகளின் சம்பளம் 18 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கும். அரசாங்கம் என்ற ரீதியில் மேலதிகமாக 12 பில்லியன் ரூபாவை செலவிடவேண்டியுள்ளது. அரசாங்கம் தனது இலக்கை எட்டுவதற்கு அனைத்து அரச பொறிமுறையும் கவனம் செலுத்தவேண்டும் என்றும் அமைச்சர் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.

Ninaivil

திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
திரு பஞ்சாட்சரம் விஜயேந்திரன் (தவம்)
யாழ். இணுவில்
நோர்வே
15 டிசெம்பர் 2017
Pub.Date: December 16, 2017
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
திருமதி ஶ்ரீமதி சாரதா அம்மா சிவசாமிக்குருக்கள்
யாழ். காரைநகர்,
கொழும்பு
13 டிசெம்பர் 2017
Pub.Date: December 13, 2017
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
திரு சிவசிதம்பரம் கனகரத்தினம் (தவம்)
வவுனியா நெடுங்கேணி
டென்மார்க்
12 டிசெம்பர் 2017
Pub.Date: December 12, 2017
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
திரு ஹரீஸ் செல்வச்சந்திரன்
லண்டன்
லண்டன்
25 நவம்பர் 2017
Pub.Date: December 11, 2017
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
திரு றமிலன் பாலசுப்பிரமணியம்
ஜெர்மனி
ஜெர்மனி
4 டிசெம்பர் 2017
Pub.Date: December 10, 2017
திரு அருணாசலம் வேல்முருகு
திரு அருணாசலம் வேல்முருகு
அனுராதபுரம்
யாழ். உரும்பிராய் கோப்பாய், கனடா
8 டிசெம்பர் 2017
Pub.Date: December 8, 2017