ஜாலியன்வாலா பாக் படுகொலைக்கு பிரிட்டன் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்: பஞ்சாபில் லண்டன் மேயர் பேச்சு

சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில் 13-4-1919 அன்று ரெஜினால்ட் டையர் என்ற இராணுவ அதிகாரியின் தலைமையில் பிரித்தானிய இராணுவத்தினரால் தொடர்ந்து பத்து நிமிடங்கள் நிகழ்த்தப்பட்ட பீரங்கி மற்றும் துப்பாக்கிச் சூட்டில் பெண்கள், சிறுவர்கள் என சுமார் ஆயிரம் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்த துயர சம்பவத்தை யாரும் மறந்து விடகூடாது என குறிப்பிட்டுள்ள லண்டன் நகர மேயர் சாதிக் கான், இந்த கொடூரத்துக்காக பிரிட்டன் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த சாதிக் கான் லண்டன் நகர மேயராக பொறுப்பேற்றுள்ளார். இவரது தாத்தாவும் பாட்டியும் இந்தியாவில் பிறந்து, சுதந்திரகால பிரிவினைக்கு பின்னர் பாகிஸ்தானில் குடியேறி, அங்கிருந்து பிரிட்டன் நாட்டுக்கு புலம்பெயர்ந்து சென்றவர்கள்.

இந்நிலையில், தங்களது மூதாதையர்கள் பிறந்து, வளர்ந்த இந்தியாவுக்கு மூன்றுநாள் பயணமாக வந்துள்ள லண்டன் நகர மேயர் சாதிக் கான், ஜாலியன்வாலா பாக் பகுதியில் உள்ள நினைவிடத்தில் அந்த தாக்குதலில் பலியானவர்களுக்கு நேற்று அஞ்சலி செலுத்தினார். அங்குள்ள வருகையாளர் பதிவேட்டில் ‘1919-ம் ஆண்டு நடைபெற்ற இந்த துயரத்தை நாம் மறந்து விட கூடாது. இதற்காக பிரிட்டன் அரசு மன்னிப்பு கேட்க வேண்டிய நேரம் இது’ என பதிவு செய்து கையொப்பமிட்டார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ஜாலியன்வாலா பாக் தாக்குதலை படுகொலை என்று சிலர் அழைப்பதால் அந்த சம்பவத்துக்கு பிரிட்டன் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என நான் கருதுகிறேன் என்று அவர் குறிப்பிட்டார். அவரது கருத்தை பஞ்சாப் முதல் மந்திரி அமரிந்தர் சிங் வரவேற்றுள்ளார்.

பிரிட்டன் அரசின் பிரதிநிதி என்ற மூறையில் லண்டன் மேயர் தெரிவித்துள்ள இந்த கருத்து நடைமுறைப்படுத்தப்பட்டால் இந்தியா - பிரிட்டன் நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை மேலும் பலப்படுத்தும். இந்திய சுதந்திர போராட்டத்தில் கொடுமைகளை அனுபவித்த இந்தியர்களின் காயத்தையும் குணப்படுத்தும் என அமரிந்தர் சிங் குறிப்பிட்டார்.

முன்னதாக, டெல்லி, மும்பை நகரங்களில் சுற்றுப்பயணம் செய்த சாதிக் கான் இன்று காலை அமிர்தசரஸ் நகரில் உள்ள சீக்கிய பொற்கோயிலை பார்வையிட்டார்.


Ninaivil

திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
திரு சின்னையா அருளானந்தம் (ராஜா)
யாழ். மிருசுவில்
லண்டன்
17 பெப்ரவரி 2018
Pub.Date: February 18, 2018
திருமதி சரஸ்வதி கந்தசாமி
திருமதி சரஸ்வதி கந்தசாமி
யாழ். காங்கேசன்துறை
பிரித்தானியா
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 16, 2018
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
யாழ். பலாலி
ஜெர்மனி
12 பெப்ரவரி 2018
Pub.Date: February 14, 2018
திரு செல்வதுரை கனகநாயகம்
திரு செல்வதுரை கனகநாயகம்
யாழ். ஆனைக்கோட்டை
பிரான்ஸ்
9 பெப்ரவரி 2018
Pub.Date: February 13, 2018
திருமதி வல்லிபுரம் செல்வராசாத்தி
திருமதி வல்லிபுரம் செல்வராசாத்தி
யாழ். நவாலி
கனடா
11 பெப்ரவரி 2018
Pub.Date: February 12, 2018

Event Calendar